எம்.எல்.ஏ., மகன் மாயம்; போலீசார் விசாரணை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருக்கனுார் : திருபுவனை எம்.எல்.ஏ., அங்காளன் மகன் திலகரசன் மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அங்காளன், திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.இவரது மகன் திலகரசன், 28. இவர் நேற்று காலை 11:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு

திருக்கனுார் : திருபுவனை எம்.எல்.ஏ., அங்காளன் மகன் திலகரசன் மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அங்காளன், திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.இவரது மகன் திலகரசன், 28. இவர் நேற்று காலை 11:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.இதையடுத்து குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் திலகரசன் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அங்காளன் எம்.எல்.ஏ., திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் புனிதராஜா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.திலகரசனை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0413- 2688435 எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X