மீண்டும் தீவிரமடைந்த மழை: தத்தளிக்கும் கேரளா!

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மூணாறு : கேரளாவில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை மீண்டும் தீவிரமடைந்தது. நேற்று காலை முதல் 2018ல் ஏற்பட்ட பேரழிவின்போது பெய்த மழையை நினைவு கூரும் வகையில் மழை கொட்டியதால் திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உட்பட பல்வேறு மாவடங்களில் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன.இதையடுத்து, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர்,
kerala,rain,கேரளா,மழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மூணாறு : கேரளாவில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை மீண்டும் தீவிரமடைந்தது. நேற்று காலை முதல் 2018ல் ஏற்பட்ட பேரழிவின்போது பெய்த மழையை நினைவு கூரும் வகையில் மழை கொட்டியதால் திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உட்பட பல்வேறு மாவடங்களில் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன.

இதையடுத்து, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'டும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, கொல்லம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும், திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு எல்லோ அலர்ட்டும் விடுக்கப்பட்டது.


latest tamil news



latest tamil news


கனமழையால், கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கல்லார் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ரோட்டில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பல மணிநேரம் தடைபட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
05-ஆக-202212:30:50 IST Report Abuse
Krishnamurthy Venkatesan காவேரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஹோகேனக்கல்லில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது. இந்த அதிகப்படியான நீரை தமிழக அரசு எவ்வாறு சேமிக்கிறது என யாரென்றும் சொல்வார்களா?
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
05-ஆக-202208:32:13 IST Report Abuse
shyamnats வெட்டியாக கடலில் தண்ணீரை விட்டாலும் விடுவோம், தமிழ் நாட்டிற்கு விட மாட்டோம், என்பதுதானே கேரளாவின் கொள்கை. நாங்களும் அப்படியே, அவர்கள் திறந்து விட்டாலும், நாங்களும் சேமிக்க மாட்டோம், கடலில் விட்டு விடுவோம், அடுத்த மாதமே தண்ணீருக்கு கையேந்துவோம் அறுபது வருடங்களாக இதைத்தானே பார்த்து கொண்டிருக்கிறோம்.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
05-ஆக-202206:40:21 IST Report Abuse
Sai சில தடுப்பணைகளைக் கட்டி பெரியார் அணைக்கு வரவேண்டிய தண்ணீரையெல்லாம் தங்கள் இடுக்கி அணைக்கு திருட்டுத்தனமாக தள்ளிக் கொண்டு போனதற்கான வருண பகவானின் தண்டனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X