கடலில் காற்றாலை மின்சாரம்; நார்வே ஒத்துழைப்பதாக உறுதி

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை--தமிழகத்தில், நவீன துறைமுகங்கள் அமைக்கவும், கடலில் காற்றாலை மின்சாரம் அமைக்கவும் ஒத்துழைப்பதாக, நார்வே நாட்டு துாதர் தெரிவித்துள்ளார்.இந்தியாவிற்கான நார்வே நாட்டு துாதர் ஹான்ஸ் ஜேக்கப் பிரைடன்லண்ட், நேற்று தலைமை செயலகத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலுவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, நார்வே நாட்டின் ஆலோசகர் மாரிட் மேரி
காற்றாலை மின்சாரம், நார்வே,கடல் காற்றாலை, Wind power, Norway,

சென்னை--தமிழகத்தில், நவீன துறைமுகங்கள் அமைக்கவும், கடலில் காற்றாலை மின்சாரம் அமைக்கவும் ஒத்துழைப்பதாக, நார்வே நாட்டு துாதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான நார்வே நாட்டு துாதர் ஹான்ஸ் ஜேக்கப் பிரைடன்லண்ட், நேற்று தலைமை செயலகத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலுவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, நார்வே நாட்டின் ஆலோசகர் மாரிட் மேரி ஸ்ட்ராண்ட், வணிக ஆலோசகர் கிறிஸ்டியன் ஆர்.வி.கார்ட்டர் உள்ளிட்டோரும், அமைச்சர் வேலுவுடன், கடல்வழி போக்குவரத்து தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

கடலில் காற்றாலை மின் நிலையம் அமைத்தல், கடலோர கப்பல் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்டவை குறித்து, அப்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில், நவீன துறைமுகங்கள் அமைப்பதற்கும், கடலில் காற்றாலை மின் நிலையம் அமைப்பதற்கும் ஒத்துழைப்பு தருவதாக, நார்வே குழுவினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chennaivaasi - Chennai,இந்தியா
05-ஆக-202212:34:39 IST Report Abuse
Chennaivaasi ராஜா தெரிவித்தது போல, வங்காள விரிகுடாவின் அமைப்பு கடலில் காற்றாலை அமைக்க ஒத்துழைப்பு தராது. சீரான ஆழம் கிடையாது, மணல் திட்டுக்கள், நீரோட்டம் மிக அதிகம். நீரோட்டம் கூட சீராக இருக்காது. அடிக்கடி காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் ஆபத்து மிக அதிகம். மீண்டும் ஒரு சேது சமுத்திர திட்டம், யாருக்கோ பலன், மக்களுக்கு நிச்சயம் அல்ல.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
05-ஆக-202211:45:12 IST Report Abuse
raja நார்வேலா புயல் எல்லாம் வராது ... ஆனா தமிழகத்தில் புயல் வரும்போது காற்றாலை எல்லாம் பிச்சுக்கிட்டு பறந்து விடும்... எந்த அறிவாளி சொன்னானோ அணிலுக்கு இந்த திட்டத்தை ... விஞ்ஞான ஊழல் செய்ய வசதியா இருக்கும்...
Rate this:
Cancel
05-ஆக-202208:43:20 IST Report Abuse
Gopalakrishnan S ஒப்பந்தப்புள்ளிகள் கட்டுமரக் குடும்பத்திற்கு மட்டுமே தர வேண்டும். இல்லை எனில் மீனவர்கள் வாழ்வாதாரம் சிதைக்கப்படும ! மீன் வளர்ச்சி பாதிக்கும். சமுத்திரத்தில் முழங்கால் அளவு நீரில் நின்று போராடுவோம் ! இப்படிக்கு ஐயகோ வைகோ, ஓசிச்சோறு வீரமணி, குருமா, சைமன், உண்டியல் கொள்கை வாதிகள் !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X