இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் 4 இடங்களில் சுங்க கட்டணம் ரத்து

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில், நான்கு இடங்களில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டு உள்ளது.தமிழகம் - -புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அக்கரை முதல் மாமல்லபுரம் வரை 32 கி.மீ.,க்கு இச்சாலை நான்கு வழியாக 2018ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான சாலை விரிவாக்கம்
ECR, OMR, toll gate

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில், நான்கு இடங்களில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் - -புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அக்கரை முதல் மாமல்லபுரம் வரை 32 கி.மீ.,க்கு இச்சாலை நான்கு வழியாக 2018ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.

இச்சாலையில், வெங்கம்பாக்கம் மற்றும் புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள அனுமந்தை ஆகிய இடங்களில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் இயங்கும் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதேபோல, பழைய மாமல்லபுரம் சாலையில், பூஞ்சேரி மற்றும் சட்ராஸ் அருகே இரண்டு இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.


latest tamil news



தற்போது, மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்காக, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. இச்சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்படைத்துள்ளது. எனவே, நான்கு இடங்களிலும் சுங்க கட்டண வசூல் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Coimbatore,இந்தியா
05-ஆக-202217:22:37 IST Report Abuse
CBE CTZN "மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்காக, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. இச்சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்படைத்துள்ளது." மாநில நெடுஞ்சாலைத்துறைஇடம் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சாலைகள் கைமாறுகிறது அவ்ளோதான்.. இவ்ளோ நாள் மாநில நெடுஞ்சாலைத்துறை வசூலித்தது .. சாலை அமைக்கும் வேலை முடிந்தவுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலை ஆரம்பிக்கும் ... மக்களே நாம் தொகையை குடுக்கவேண்டியதுதான் ...
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
05-ஆக-202216:46:53 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman இந்த சாலைகளை தேசிய நெடுஞ்சாலை துரையிடம் தான் ஒப்படைத்து ஆயிற்றே. இனிமே சுங்க வசூல் செய்தால் அது ஒன்றிய அரசிற்கு போய்விடும். ஆகயால் வசூலை நிறுத்தி விட்டு நாம் மக்களிடம் நல்ல பெயர் எடுத்து விடலாம். நட்டம் ஒன்றிய அரசிற்கு தானே. நமக்கு என்ன கவலை என்கின்ற உயர்ந்த எண்ணம் தான்.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
05-ஆக-202213:56:13 IST Report Abuse
N Annamalai மிக்க மகிழ்ச்சியான செய்தி .இது போல் அணைத்து சாவடிகளை மூட வழி செய்ய வேண்டும் .
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
05-ஆக-202215:58:26 IST Report Abuse
Saiஎல்லாத்தயும் மூடிடறதா சொல்லிட்டாரே "மத்திய" மந்திரி கார் அந்த வழியா போனாலே GPS ச வச்சு தானாகவே ஒங்க பாக்கெட்டிலிருந்து (வங்கிக் கணக்கிலிருந்து) பணம் போயிடுகிற மாதிரி சாப்ட்வெர் ரெடியாகுதாம் நம்ம நம்பர் பிளேட்டை பாதுகாப்பா வச்சிக்கணுமோ வலிக்காமே ஊசி குத்தறாங்க இதே மாதிரி திட்டம் வருமான வரியும் இன்னபிற வரிகளுக்கும் நீளும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X