விநாயகர் சதுர்த்திக்கு 1.25 லட்சம் சிலைகள்: பிரதிஷ்டை செய்ய ஹிந்து முன்னணி தயார்

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, தமிழகம் முழுதும், ஹிந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில், சில மாதங்களாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், காகிதக்கூழ்,
Vinayagar Chaturthi, Ganesh Chaturthi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, தமிழகம் முழுதும், ஹிந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில், சில மாதங்களாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், காகிதக்கூழ், கிழங்கு மாவு வாயிலாக தயாரிக்கப்பட்ட சிலை பாகங்கள், திருப்பூர் மாவட்டம் அலகுமலை மற்றும் கொடுவாய் அருகே எடுத்து வரப்பட்டு, அவற்றைப் பொருத்தும் பணி நடக்கிறது.

ஈரோடு மற்றும் பவானிசாகரிலும் இப்பணி நடக்கிறது. தொடர்ந்து, சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இப்பணி முழுமையாக நிறைவு பெற்ற பின், அடுத்த வாரத்தில், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்ப சிலைகள் தயாராக உள்ளன.


latest tamil news


ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: கோவையில் 6,000, திருப்பூரில் 5,000 உட்பட, தமிழகம் முழுதும், 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பின், விநாயகர் ஊர்வலம் நடக்க உள்ளதால் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

வரும் 31 முதல், செப்., 4ம் தேதி வரை சதுர்த்தி விழா கொண்டாட உள்ளோம். செப்., 3ம் தேதி, திருப்பூர் மாநகரம், ஈரோடு, பொள்ளாச்சி, 4ம் தேதி கோவை, நீலகிரியில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. திருப்பூர் விசர்ஜன ஊர்வலத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், கோவையில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவும் பங்கேற்க உள்ளனர்.

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம்; தேசிய சிந்தனையை வளர்ப்போம்' என்ற கோஷத்துடன் கொண்டாடப்பட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
05-ஆக-202216:44:07 IST Report Abuse
sankar ஊர்வலமாக போய் தொழுகை நேரத்தில் மசூதி அருகே நினறு கொண்டு ட்ரம் அடிக்காமல் இருந்தாலே போதும்.
Rate this:
Cancel
Abhivadaye - Salem,இந்தியா
05-ஆக-202215:36:35 IST Report Abuse
Abhivadaye இந்தியன் படம் மறுபடியும் எடுக்கலாம், விக்ரம், எந்திரன் படம் பல கோடி செலவு பண்ணலாம் , கலைஞர் மணி மண்டபம் இந்தாங்க நாற்பது கோடி தமிழக அரசு கொடுக்கும் , சிவாஜி மணி மண்டபம் - இதோ திமுக அதிமுக எந்த கட்சி இருந்தாலும் பட்ஜெட் இருக்கு, ஈ , வே ரா சிலையா பிடி நூறு கோடி மக்கள் வரிப்பணம். இப்படி செலவு செய்ஞ்சா ஆஸ்பத்திரி , ஸ்கூல் பத்தி வாய தொறக்கமாட்டேன் . விநாயகர் சிலை சொந்த காசை போட்டு மக்கள் வாங்கறதா ? நோ .. இந்த காசிலே ஆஸ்பத்திரி கட்டலாம் ஸ்கூல் கட்டலாம் ,....
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
05-ஆக-202213:32:20 IST Report Abuse
J. G. Muthuraj போன ஆண்டு, சிலைகள் வடிப்பது சம்பந்தமாக, அவைகளை கடலில் கரைப்பது சம்பந்தமாக, ஊர்வலங்கள் பற்றியும் சில கட்டுப்பாடுகளும், வழிகாட்டிகளும் காவல் துறையால் சுற்று சூழல் குழுவினால் கொடுக்கப்பட்டிருந்தன ...அவர்கள் கொடுத்த விதிகளை இவ்வாண்டுக்கு ஏற்றவாறு திருத்தி அமலுக்கு கொண்டுவரவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X