ஓ.பி.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: 'மாஜி' எம்.எல்.ஏ., தகவல்

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
கோவை : ''வரும், 20ம் தேதிக்கு மேல், ஓ.பி.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்,'' என, முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ் தெரிவித்தார்.அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எம்.ஏ., செல்வராஜ், அவிநாசி சாலையிலுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ., திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்,
Panneerselvam,OPS, ADMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : ''வரும், 20ம் தேதிக்கு மேல், ஓ.பி.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்,'' என, முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ் தெரிவித்தார்.

அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எம்.ஏ., செல்வராஜ், அவிநாசி சாலையிலுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ., திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


latest tamil news



பின், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டம் அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் படுதோல்வி அடைந்தது. கோவை முழுவதும் எனது தலைமையில் ஒவ்வொரு கிராமமும் சென்று, சைக்கிள் பேரணி நடத்தி கட்சியை பலப்படுத்துவோம். வரும், செப்., மாதத்தில் ஓ.பி.எஸ்., தலைமையில் வ.உ.சி., பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.

ஓ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க.,வே உண்மையானது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல இருக்கிறது. வரும், 20ம் தேதிக்கு மேல், ஓ.பி.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Vardhini - Coimbatore,இந்தியா
05-ஆக-202218:03:03 IST Report Abuse
Raja Vardhini இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது... என்று வடிவேல் படத்தில் ஒரு வசனம் வரும்... அதுபோல் எல்லோருக்கும் அல்வா கொடுக்கும் பன்னீர் தேனி மாவட்டத்தில் சுற்றினால் கூட யாரும் சீந்த மாட்டார்கள்...
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
05-ஆக-202214:49:05 IST Report Abuse
a natanasabapathy Onrum theraathu .
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
05-ஆக-202214:37:48 IST Report Abuse
சீனி ஆள் இல்லாத டீக்கடையில் ஆறிப்போன டீயை ஆற்றி என்ன பயன் ? ஒரு தலைவன் எப்படி இருக்கனும்ம்னு எடப்பாடிக்கிட்ட கத்துக்க நிறைய உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X