தொரப்பள்ளி ஆற்றில் இரவு நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில், கன மழைக்கு வாய்ப்பு இருந்ததால், நேற்றும், (ஆக., 04) வானிலை மையம் 'ரெட் அலர்ட்' அறிவித்திருந்தது. கூடலூரில், பிற்பகல் முதல் மிதமான மழை தொடர்ந்து. இந்நிலையில், தொரப்பள்ளி ஆற்றில் இரவு நீர்வரத்து அதிகரித்தது.கூடலூர் வருவாய் ஆய்வாளர்கள் சகிர், உமா, வி.ஏ.ஓ., மோகன்ராஜ், கிராம உதவியாளர் ஜெயகுமார், ஊழியர்கள் இரவில், அப்பகுதியில் ஆய்வு செய்து, ஆற்றின்
 தொரப்பள்ளி,  ஆறு, நீர்வரத்து, அதிகரிப்பு

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில், கன மழைக்கு வாய்ப்பு இருந்ததால், நேற்றும், (ஆக., 04) வானிலை மையம் 'ரெட் அலர்ட்' அறிவித்திருந்தது. கூடலூரில், பிற்பகல் முதல் மிதமான மழை தொடர்ந்து. இந்நிலையில், தொரப்பள்ளி ஆற்றில் இரவு நீர்வரத்து அதிகரித்தது.

கூடலூர் வருவாய் ஆய்வாளர்கள் சகிர், உமா, வி.ஏ.ஓ., மோகன்ராஜ், கிராம உதவியாளர் ஜெயகுமார், ஊழியர்கள் இரவில், அப்பகுதியில் ஆய்வு செய்து, ஆற்றின் கரையை ஒட்டிய இருவயல், மொளப்பள்ளி கிராமங்களில் வசிக்கும், 72 பழங்குடி மக்களை முன் எச்சரிக்கையாக மீட்டு, தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைத்தனர்.இன்று (ஆக.,5) அதிகாலையில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஊசிமலை அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தோமா நகர், முதுமலை தொரப்பள்ளி பகுதிகளில் மரம், மூங்கில்கள் சாலையில் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு துறை, போலீசார் ஜே.சி.பி., உதவியுடன் அவைகளை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X