காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு 6வது தங்கம்: பாரா பளுதூக்குதலில் சுதிர் அசத்தல்

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | |
Advertisement
பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டி பாரா பளுதூக்குதலில் கலந்து கொண்ட இந்திய வீரர் சுதிர், இந்தியாவுக்கு 6வது தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்தார். நீளம் தாண்டுதலில், வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் புதிய சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பாரா பளுதூக்குதலில்
CWG 2022,Sudhir, Gold,Para Powerlifting,Commonwealth, Commonwealth Games 2022

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டி பாரா பளுதூக்குதலில் கலந்து கொண்ட இந்திய வீரர் சுதிர், இந்தியாவுக்கு 6வது தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்தார். நீளம் தாண்டுதலில், வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பாரா பளுதூக்குதலில் கலந்து கொண்ட இந்திய வீரர் சுதிர் 134.5 புள்ளிகள் எடுத்து, புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை கைபற்றினார். நடப்பு காமன்வெல்த் போட்டியில், இந்தியா வெல்லும் 6வது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர், 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைபற்றினார். காமன்வெல்த் போட்டிகளில், ஆண்கள் நீளம் தாண்டுதலில் இந்தியா வெல்லும் முதல் வெள்ளி பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா, 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதங்கங்களை வென்று, 7வது இடம் வகிக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X