50 நாட்களாகியும் வரவில்லை நோட்டு: கிராமப்புற மாணவர்கள் தவிப்பு

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
திருப்பூர்: கிராமப்புறங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 15 சதவீத மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் இன்னும் வினியோகிக்காததால் கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி அளிப்பதற்கு, 2 வரி நோட்டு, கட்டுரை பயிற்சி ஏடு, கணித பாடத்துக்கு

திருப்பூர்: கிராமப்புறங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 15 சதவீத மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் இன்னும் வினியோகிக்காததால் கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டுள்ளது.



latest tamil news




அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி அளிப்பதற்கு, 2 வரி நோட்டு, கட்டுரை பயிற்சி ஏடு, கணித பாடத்துக்கு வடிவியல் ஏடு, வரைபட (கிராப்) ஏடு மற்றும் அந்தந்த பாடங்களுக்கான தனித்தனி நோட்டு புத்தகங்கள் என ஒரு மாணவருக்கு, 10 நோட்டுகள் வரை பள்ளி கல்வித்துறையால் இலவசமாக வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு, 50 நாட்களுக்கு மேல் ஆகியும் பல அரசு பள்ளிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் பள்ளி கல்வித்துறை சார்பில், 15 சதவீத மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மாணவ, மாணவிகள் கடைகளில், செலவு செய்து நோட்டு புத்தகங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ''அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடபுத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டு விட்டன. ஆனால் தற்போது வரை பல அரசுப்பள்ளிகளுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள் தாமதமாகின்றன. இதனால் கற்றல்- கற்பித்தலில் பெரும் தொய்வு ஏற்பட்டது.


latest tamil news




நோட்டு புத்தகங்களை பணம் கொடுத்து வாங்க முடியாத குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வழங்கி வருகிறோம். அரசு பள்ளிகளை பெற்றோர் தேடி வருவதற்கு முக்கிய காரணம், அங்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்கள்தான். அவற்றை தாமதமின்றி வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


கல்வித்துறை விளக்கம்



கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த 1ம் தேதி முதல் நோட்டு புத்தகங்கள் வரத்துவங்கியுள்ளன. இப்போதைய நிலவரப்படி, 85 சதவீத மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.மீதமுள்ள நோட்டுகளை அச்சிட்டு அனுப்பி வைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த வார இறுதி அல்லது அடுத்த வார தொடக்கத்தில் எஞ்சியுள்ள, 15 சதவீத நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டு விடும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C G MAGESH - CHENNAI,இந்தியா
05-ஆக-202218:11:08 IST Report Abuse
C G MAGESH டாஸ்மாக் சரக்கா இருந்தா உடனே வந்திருக்கும்
Rate this:
Cancel
05-ஆக-202215:51:30 IST Report Abuse
அருணா நிதிப் பற்றாக்குறை பேனா... விற்கு அல்ல குழந்தைகளே
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
05-ஆக-202214:47:26 IST Report Abuse
a natanasabapathy Thirappu vizhaakkalulku sellavum munthaiya aatchiyai kurai kooruvatharkkume neram pothavillai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X