12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (5.8.2022 - 11.8.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சுக்கிரன் நன்மையை வழங்குவார். மகாலட்சுமி வழிபாடு நன்மையளிக்கும்.அசுவினி: வாரத்தின் முதல் நாளில் உங்கள் விருப்பம் நிறைவேறும். சனிக்கிழமை முதல் திங்கள் காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களில் விழிப்புணர்வு
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷிபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், கன்னி,  விருச்சிகம்,  தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (5.8.2022 - 11.8.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்


சுக்கிரன் நன்மையை வழங்குவார். மகாலட்சுமி வழிபாடு நன்மையளிக்கும்.

அசுவினி: வாரத்தின் முதல் நாளில் உங்கள் விருப்பம் நிறைவேறும். சனிக்கிழமை முதல் திங்கள் காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களில் விழிப்புணர்வு தேவை. அதன்பின் வியாழக்கிழமை வரை உங்கள் முயற்சி நன்மையாகும்.

பரணி: வெள்ளிக்கிழமை உங்கள் விருப்பம் நிறைவேறும். சனி, ஞாயிறில் எச்சரிக்கை அவசியம். திங்கள் கிழமை மதியம் முதல் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறத் தொடங்கும். முயற்சிக்கேற்ப பலன் உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: சந்திர பலத்தினால் சாதனை புரிவீர்கள் என்றாலும் சனிக்கிழமை முதல் சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கை அவசியம் திங்கள் கிழமை மதியம் முதல் வியாழக்கிழமை வரை உங்கள் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

சந்திராஷ்டமம்


6.8.2022 காலை 8:57 மணி - 8.8.2022 காலை 11.53 மணி
ரிஷபம்


சுக்கிரன், சூரியன், கேது, புதன் நன்மைகளை வழங்குவார்கள். விநாயகரை வழிபடுங்கள்.


latest tamil news


கார்த்திகை 2, 3, 4: திங்கள் கிழமை காலை வரை உங்கள் முயற்சிகள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும். திங்கள் கிழமை மதியம் முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. புதன் கிழமை மதியத்திற்கு மேல் செயல்களில் ஆதாயம் தோன்றும்.

ரோகிணி: பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைப்பது நிறைவேறும். உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயத்தை அடைவீர்கள். திங்கள் கிழமை காலை முதல் புதன் கிழமை மதியம் வரை செயல்கள் இழுபறியாகும். சங்கடங்கள் தோன்றும். அதன்பின் நிலைமை சீராகும்.

மிருகசீரிடம் 1, 2: நற்பலன்கள் காணும் வாரம் இது. வெள்ளி முதல் திங்கள் காலை வரை உங்கள் செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முயற்சிகள் இழுபறியாகும். சில சங்கடங்கள் உண்டாகும். புதன் கிழமை மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறத் தொடங்கும். நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்


8.8.2022 காலை 11:54 மணி - 10.8.2022 மதியம் 2:14 மணி
மிதுனம்


செவ்வாய், ராகு, சுக்கிரன், நன்மைகளை வழங்குவார்கள். வெங்கடாஜலபதியை வழிபடுங்கள்.

மிருகசீரிடம் 3, 4: விருப்பங்கள் பூர்த்தியாகும் வாரம் இது. இழுபறியாக இருந்த முயற்சிகள் நிறைவேறும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். அந்நியர்களால் ஆதாயம் அதிகரிக்கும். புதன் கிழமை மதியத்திற்கு மேல் செயல்களில் கவனம் தேவை.

திருவாதிரை: நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தை நவீனமயம் செய்வீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வர ஆரம்பிக்கும். முயற்சிகள் பலிதமாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதன் கிழமை மதியம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயல்களில் கவனம் தேவை.

புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதன்கிழமை மதியம் வரை உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். அதன்பின் கவனித்து செயல்பட வேண்டியதாக இருக்கும்.

சந்திராஷ்டமம்


10.8.2022 மதியம் 2:15 மணி - 12.8.2022 மாலை 4:55 மணி

கடகம்


சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபடுங்கள்.

புனர்பூசம் 4: குரு பகவான் வக்கிரமடைவதால் இதுநாள் வரை சந்தித்து வந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும் என்றாலும் உங்கள் ராசிநாதன் வாரம் முழுவதும் நற்பலன்களை வழங்குவார் என்பதால் திட்டமிட்ட செயல்களில் லாபநிலை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூசம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது. உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் என்றாலும் நான்காமிட கேதுவால் உடல் நிலையில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

ஆயில்யம்: உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் வாரம் இது. குரு பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் சில செயல்களில் யோசிக்காமல் ஈடுபடுவீர்கள். உங்கள் செயல்களை நிறைவேற்றிக் கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிக்கேற்ற அளவில் வெற்றியிருக்கும். நிதிநிலை உயரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.சிம்மம்


கேது, சுக்கிரன் நன்மைகளை வழங்குவார்கள். சூரிய வழிபாடு நன்மையை ஏற்படுத்தும்.


latest tamil newsமகம்: வெள்ளிக்கிழமை உங்கள் முயற்சிகள் நிறைவேறும். சனி ஞாயிறில் உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வீர்கள். திங்கள் முதல் வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.

பூரம்: வாரத்தின் முதல் நாளில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். சனி ஞாயிறில் ஓய்வு, ஆனந்தம், இறை வழிபாடு என்று ஈடுபடுவீர்கள். திங்கள் முதல் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு ஆதாயம் காண்பீர்கள். அரசு பணியாளர்களின் நிலை உயரும். விருப்பங்கள் பூர்த்தியாகும்.

உத்திரம் 1: அஷ்டம குரு வக்கிரமடைவதால் இனி உங்கள் நிலையில் மாற்றம் முன்னேற்றம்தான். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறத் தொடங்கும். முயற்சிகள் லாபமாகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும்.கன்னி


சூரியன், சுக்கிரன் நன்மைகளை வழங்குவார்கள். குலதெய்வத்தை வழிபடுங்கள்.

உத்திரம் 2, 3, 4: நன்மைகளை வழங்கி வந்த குருபகவான் வக்கிரமடைந்தாலும் உங்களுடைய லாபாதிபதி சந்திரன் வாரம் முழுவதும் நன்மைகளை வழங்குவார். ஞாயிறு மாலை முதல் உங்களுடைய பாக்கியாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுடைய எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

அஸ்தம்: வெள்ளி முதல் திங்கள் கிழமை காலை வரை உங்களுடைய முயற்சிகள் எளிதாக நிறைவேறும். அதன்பின் முயற்சிகளில் கவனம் தேவைப்படும் என்றாலும் வரவு அதிகரிக்கும். அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயமாகும். புதிய பொறுப்பு வந்து சேரும். அரசு ஊழியர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

சித்திரை 1, 2: குடும்பத்திற்காக நீங்கள் கடுமையாக உழைத்தாலும் உங்களால் நல்ல பெயர் வாங்க முடியாது என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அரசு வழி செயல்கள் ஆதாயமாகும். எதிர்பாலினரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். பண வரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.துலாம்


சூரியன், புதன் நன்மையை வழங்குவார்கள். ஆறுமுகனை வழிபடுங்கள்.

சித்திரை 3, 4: பெரும்பாலான கிரகங்கள் எதிர்மறையான பலன்களை வழங்கி வரும் நிலையில், குரு பகவான் வக்கிர கதி அடைவதால் சில மாற்றங்கள் ஏற்படும். வெள்ளிக்கிழமை செயல்களில் இழுபறி ஏற்பட்டாலும் அதன் பிறகு உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். அரசு ஒப்பந்தங்கள் லாபம் தரும். வர வேண்டிய தொகை வந்து சேரும் என்றாலும் செலவுகளில் கவனம் தேவை.

சுவாதி: தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வரும் உங்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நிறைந்த வாரமாகும். வேலை வாய்ப்பிற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பண வரவில் உங்கள் கவனம் செல்லும். முயற்சிகள் பலிதமாகும்.

விசாகம் 1, 2, 3: வாரத்தின் முதல் நாளில் உங்கள் கவனக்குறைவால் முயற்சிகள் பலன் தராமல் போகும். அதன்பின் சிந்தித்து செயல்படுவீர்கள். வியாபாரம் விருத்தியாகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். தொடர்ந்து இறைவழி பாட்டை மேற்கொள்வதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறத் தொடங்கும்.விருச்சிகம்


ராகு, செவ்வாய், சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். வராகியை வழிபடுங்கள்.

விசாகம் 4: வெள்ளிக்கிழமை அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். சனி ஞாயிறில் உங்கள் மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். திங்கள் கிழமை முதல் திட்டமிட்டு செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

அனுஷம்: வாரத்தின் முதல் நாளில் வீண் செலவுகள் இருக்கும். சனி, ஞாயிறில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். திங்கள் முதல் வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்படைவீர்கள். பொருளாதார நிலை உயரும். எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

கேட்டை: குரு பகவான் வக்கிரம் அடைவதால் எந்தவொரு செயலிலும் யோசித்து செயல்படுங்கள். வெள்ளிக்கிழமை சில சங்கடங்களை சந்தித்தாலும் அதன்பின் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தினரின் நலனில் அக்கறை அதிகரிக்கும். வருமானத்திற்குரிய செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.தனுசு


கேது நன்மையை வழங்குவார். குரு பகவானை வழிபடுங்கள்.

மூலம்: வெள்ளிக்கிழமை உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். சனி ஞாயிறில் செலவுகள் அதிகரிக்கும். ஒரு சிலர் கடன் வாங்கவும் செய்வீர்கள். அதன்பின் புதன் கிழமை மதியம் வரையில் மனதில் குழப்பங்களும் செயலில் தடைகளும் இருக்கும். வியாழக்கிழமையில் இருந்து தெளிவுடன் சிந்தித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

பூராடம்: வாரத்தின் முதல் நாளில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அதன்பின் செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும். முயற்சிகள் தள்ளிக்கொண்டு போகும். உங்கள் அலட்சியத்தால் சில இழப்புகளை சந்திப்பீர்கள். புதன் கிழமை மதியம் முதல் யோசித்து செயல்படுவீர்கள். செயல்களில் அக்கறை உண்டாகும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

உத்திராடம் 1: வெள்ளிக்கிழமை வரவேண்டிய பணம் வந்து சேரும். ஒரு முயற்சி லாபமாகும். அதன்பின் குடும்ப வழியில் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளில் பிரச்சினை ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் மனம் குழப்பமடையும். புதன் கிழமை மதியம் முதல் நிலைமைகளை புரிந்து கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.மகரம்


புதன் நன்மையை வழங்குவார். சக்தி வழிபாட்டால் வளமுண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். திங்கள் கிழமை காலை வரை உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் லாபம் தரும். அதன்பின் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை. புதன் கிழமை மதியத்திற்கு மேல் செயல்களில் குழப்பம் உண்டாகும். யோசித்து செயல்படுங்கள்.

திருவோணம்: உங்கள் முயற்சியும் கடுமையான உழைப்பும் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கி வருகிறது. திங்கள் கிழமை காலை வரை உங்களுடைய எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். அதன்பின் பல வகையிலும் செலவுகள் தோன்றும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். புதன் கிழமை மதியம் முதல் உங்கள் முயற்சிக்கேற்ற லாபம் காண்பீர்கள்.

அவிட்டம் 1, 2: வாரத்தின் முதல் நாளே உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். சனி ஞாயிறில் எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். திங்கள் செவ்வாயில் செலவுகள் அதிகரிக்கும். வரவில் தடை உண்டாகும். புதன் கிழமை முதல் முயற்சிகள் லாபமாகும். உழைப்பிற்கேற்ற வருவாய் வந்து சேரும்.கும்பம்


சூரியன், ராகு, செவ்வாய், சுக்கிரன் நன்மைகளை வழங்குவார்கள்.அம்பாளை வழிபடுங்கள்.

அவிட்டம் 3, 4: உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் வாரம் இது. எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். அரசு வகையிலான முயற்சிகள் நன்மையில் முடியும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதன் கிழமை மதியத்திற்கு மேல் செலவுகள் அதிகரிக்கும்.

சதயம்: திட்டமிட்ட செயல்களில் லாபமடைவீர்கள். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த ஒரு செயலில் லாபம் தோன்றும். உங்கள் தைரியம் அதிகரிக்கும். நினைத்த செயல்களை நினைத்தபடி செய்து முடிக்க சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகும். புதன் கிழமை மதியத்திற்கு மேல் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3: இழுபறியாக இருந்த உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஒரு சிலருக்கு வெளியூர் வாசம் ஏற்படும். அரசு பணியாளர்களின் எண்ணம் நிறைவேறும். தைரியமாக செயல்படக்கூடிய மன நிலை உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். புதன் வியாழனில் விரய செலவுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.மீனம்சுக்கிரன், புதன் நன்மையை வழங்குவார்கள். சிவனை வழிபடுங்கள்.

பூரட்டாதி 4: சனிக்கிழமை காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களில் கவனம் தேவை. அதன் பின் உங்கள் முயற்சிகள் ஆதாயம் தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் வழியே நன்மைகள் தோன்றும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

உத்திரட்டாதி: சனிக்கிழமை காலை வரை நெருக்கடிகளை சந்தித்தாலும் அதன்பின் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். பணிபுரியும் இடத்தில் ஆரோக்கியமான சூழல் உண்டாகும் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை.

ரேவதி: வாரத்தின் முதல்நாளில் செயல்களில் சிரமத்தை அடைந்தாலும் அதன்பின் தெளிவுடன் செயல்படுவீர்கள். அனுபவ அறிவால் உங்கள் முயற்சிகளில் நன்மை அடைவீர்கள் என்றாலும் குடும்பத்தில் ஒரு நேரம் இருப்பது போல் மறு நேரம் இல்லாமல் போகும்.

சந்திராஷ்டமம்


4.8.2022 அதிகாலை 4:35 - 6.8.2022 காலை 8:56 மணிபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X