பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெபோ வட்டி விகிதம் 0.5% அதிகரிப்பு

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
மும்பை: ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது; ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால், 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி 5.4 சதவீதமானது. பணவீக்கத்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளதால் வட்டி விகிதம்
reporate, rbi, reservebank, sakthikandadas, governor, economy, repo, rate, increased,

மும்பை: ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது; ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால், 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி 5.4 சதவீதமானது. பணவீக்கத்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளதால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.


latest tamil news



நுகர்வோர் பணவீக்கம் ஸ்திரத்தன்மையற்றதாக உள்ளது. பணவீக்கம் 6 சதவீதமாகவே நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். உள்நாட்டுபொருளாதார நடவடிக்கைகள் விரிவடைந்து செல்வதை பார்க்கிறோம். கிராமப்புற தேவைகள் கலவையான போக்கு காணப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகவே நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய் விலை இன்னும் குறையும் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச அளவில் நடக்கும் பிரச்னைகள் காரணமாக இந்தியா பொருளாதாரம் பாதிப்பை சந்திக்கும் சூழல் உள்ளது.


latest tamil news


2022- 23 நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ல் நுகர்வோர் விலை குறியீடானது 5 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நேரடி அன்னிய முதலீடு 13.6 பில்லியன் டாலர் என வலுவாக இருந்தது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.6 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.

ரெபோ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால், வீடு, வாகன கடன் உள்ளிட்டவை உயரக்கூடும் என தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SRINIVASALU - chennai,இந்தியா
05-ஆக-202217:52:28 IST Report Abuse
P. SRINIVASALU இந்த ஒன்றிய அரசுக்கு வட்டியும் வரியும் ஏத்துறத தவிர வேறஒண்ணும் தெரியாது.. பாவம் மக்கள். இன்னும் என்னென்ன பாக்கணுமோ...
Rate this:
Cancel
05-ஆக-202215:28:37 IST Report Abuse
ஆரூர் ரங் உக்ரைன் போர் துவங்கியது முதல் உலகின் எல்லா நாடுகளிலும் நம்மை விட அதிக பணவீக்கம்😪 தலைவிரித்தாடுகிறது. அமெரிகாவில் கூட வரலாறு காணாத ஒன்பது சதவீதத்துக்கு மேல் போய்விட்டது .நம்மிடமிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியால் நமது ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பு. சமையல் எண்ணெய் இறக்குமதிக்கே மிகவும் கூடுதல் அன்னியச் செலாவணி போகிறது . அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் பொது மக்கள்😵 இறக்குமதிப் பொருட்களை தவிர்த்து உள்நாட்டு பொருட்களை ஆதரித்தால்தான் இதிலிருந்து தப்பிக்கலாம்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
05-ஆக-202215:12:01 IST Report Abuse
J. G. Muthuraj அதெப்படி சார், பணவீக்கத்தைப்பற்றி ராகுல் கமெண்ட் கொடுத்தவுடன, அதற்கு பதில் சொல்லும் விதமாக பொருளாதார டேட்டாவை அவுத்து விட்றாரு.... பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும் சொல்கிறார்....மேலிடத்திலிருந்து இன்ஸ்ட்ரக்சன் போயிருக்குமோ?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X