கொள்ளிடம் ஆற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அளக்குடியில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் தற்போது
கொள்ளிடம் ஆற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அளக்குடியில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக பொதுப்பணித்துறை சார்பில் 3000 மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்கள் அடைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் 300 சவுக்கு கட்டைகளும் அடைக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. பொதுப்பணித்துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் சிவசங்கர் பார்வையிட்டனர்.

அமைச்சர் மெய்யநாதன் பணியை ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் கூறுகையில், கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட. தடுப்பணை அறிவிப்பு மக்களுக்கான வெற்று அறிவிப்பு. தற்போது அளக்குடியில் நிரந்தர தடுப்புச்சுவர் அமைக்கவும், தடுப்பணை மற்றும் கதவணை அமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
05-ஆக-202212:21:35 IST Report Abuse
LAX இந்த விடியாத ஆட்சியில எந்த அமைச்சனும்.. அவிங்கவிங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்ல வேலை செய்யமாட்டாய்ங்க போல.. 🙄
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
05-ஆக-202212:19:35 IST Report Abuse
raja எப்போ வெள்ளம் வரப்பத்தான் தடுப்பணை மணல் மூட்டை மண்ணாங்கட்டியெல்லாம் நியாபகம் வரும் இந்த விடியாத துக்ளக் அமைச்சனுவொளுக்கு.. வருமுன் காப்போம் என்பதும் தமிழ் தான் என்று இந்த தமிழ் தமிழன் என்று ஏமாற்றும் திருட்டு திராவிடணுவொளுக்கு தெரியாது போல.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X