கந்துவட்டியால் தற்கொலை: விரைந்து விசாரிக்க வழக்கு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரியதில், 'எதிரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்காதபட்சத்தில், அவர்களின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கடையநல்லுார் கோபி தாக்கல் செய்த மனு: கந்துவட்டி பிரச்னையால் கூலி தொழிலாளி இசக்கிமுத்து, அவரது மனைவி

திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரியதில், 'எதிரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்காதபட்சத்தில், அவர்களின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கடையநல்லுார் கோபி தாக்கல் செய்த மனு: கந்துவட்டி பிரச்னையால் கூலி தொழிலாளி இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் இரு குழந்தைகள் 2017 ல் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்தனர். சிலர் மீது கந்து வட்டி தடைச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.திருநெல்வேலி நீதித்துறை நடுவர் (ஜே.எம்.,1) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டோர் விசாரணையின் போது ஆஜராவதில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. விசாரணையை குறிப்பிட்ட காலவரம்பிற்குள் விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோபி மனு செய்தார்.நீதிபதி வி.சிவஞானம்: வழக்கின் எதிரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்காதபட்சத்தில் அவர்களின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும். காவலில் வைக்க உத்தரவிட வேண்டும். வழக்கை 2 வாரங்களில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X