வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்., முன்னாள் தலைவரும் எம்பி.,யுமான ராகுல் அளித்த பேட்டிக்கு பா.ஜ., தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. காங்., பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் அளித்த பேட்டி விவரம் வருமாறு:

நாட்டில் பொருளாதரம் பாதிப்பு, பணவீக்கம், ஜிஎஸ்டி , வேலை வாய்ப்பு விவகாரத்தில் ராகுல்
பொய் சொல்கிறார். நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டது என்கிறார். அவரது காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா.? அவரது குடும்ப நலனே அவருக்கு முக்கியம். குடும்பத்தினரை காப்பாற்ற ராகுல் துடிக்கிறார். ஊழலால் காங்கிரஸ் வளர்ந்துள்ளது.
ராகுல் ஜாமினை நாடுவது ஏன் ? காங்கிரஸ் கூறுவதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். சர்வாதிகாரம் குறித்து பேசுகிறார், இந்திரா எமர்ஜென்ஸியை அமல்படுத்தியது ஏன் ? இதனை அவர் மறந்து விட்டாரா ? பார்லி.,யில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறுகிறார். அவர் தான் பார்லி.,யில் விவாதம் நடத்த வராமல் அஞ்சுகிறார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.