போதை மாத்திரைகளுடன் மாணவர் உட்பட மூவர் கைது

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை மாவட்டம் கீழமாத்துாரில் போதை மாத்திரைகளுடன் பொறியியல் கல்லுாரி மாணவர், ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கீழமாத்துார் தனியார் பள்ளி அருகே எம்.இ., 2ம் ஆண்டு மாணவர் மதுரை பந்தல்குடி சதீஷ் 24, எம்.இ., பட்டதாரி சோலையழகுபுரம் யோகராஜை 24, நாகமலை புதுக்கோட்டை போலீசார் சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டனர். அவர்களிடம் 150 போதை (வலி நிவாரணி) மாத்திரைகள், டூவீலர், 2 அலைபேசிகளை

மதுரை மாவட்டம் கீழமாத்துாரில் போதை மாத்திரைகளுடன் பொறியியல் கல்லுாரி மாணவர், ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழமாத்துார் தனியார் பள்ளி அருகே எம்.இ., 2ம் ஆண்டு மாணவர் மதுரை பந்தல்குடி சதீஷ் 24, எம்.இ., பட்டதாரி சோலையழகுபுரம் யோகராஜை 24, நாகமலை புதுக்கோட்டை போலீசார் சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டனர். அவர்களிடம் 150 போதை (வலி நிவாரணி) மாத்திரைகள், டூவீலர், 2 அலைபேசிகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். இருவரும் ஒரு மாதமாக மருந்து கூரியர் டெலிவரியில் பகுதி நேரமாக வேலை செய்துள்ளனர். இவர்களுக்கு இம்மாத்திரைகளை டாக்டர் பரிந்துரையின்றி வழங்கிய தனியார் மருந்து கம்பெனி ஊழியர் பந்தல்குடி காசி மனைவி அபிராமியை 32, போலீசார் கைது செய்தனர்.

மருந்து கடையில் சோதனை


இதற்கிடையே மதுரை காமராஜர் ரோடு மாநகராட்சி பெண்கள் பள்ளி அருகேயுள்ள மருந்து கடை ஒன்றில் நேற்று மாலை போலீசார் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். விசாரணை நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
05-ஆக-202214:13:35 IST Report Abuse
jayvee பெண்களுக்கும் சமஉரிமை கொடுக்கும் போதை வியாபாரம் .. கஞ்சா, கள்ள சாராயம், போதை மாத்திரைகள் என்று அணைத்து வியாபாரத்திலும் பெண்கள் ஈடுபடுவதுதான் பெண்களின் சம உரிமை என்று நினைத்துக்கொண்டார்கள் போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X