50 குடும்பத்தினர் பாதுகாப்பாக தங்க வைப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
காவிரி வெள்ளம் காரணமாக, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: மேட்டூர் அணையிலிருந்து, 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடுவதால் கரூர் மாவட்டத்தில் காவிரிக்கரை ஒட்டியுள்ள அனைத்து கிராம பகுதி மக்களுக்கு வெள்ள


காவிரி வெள்ளம் காரணமாக, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
மேட்டூர் அணையிலிருந்து, 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடுவதால் கரூர் மாவட்டத்தில் காவிரிக்கரை ஒட்டியுள்ள அனைத்து கிராம பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 26 கிராமங்களிலும், வருவாய்த்துறையினர்கள் மற்றும் பிறத்துறைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தவிட்டுப்பாளையத்தில், 50 குடும்பத்திற்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எஸ்.பி., சுந்தரவதனம், டி.ஆர்..ஓ., லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம் உட்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X