அலற வைக்கும் வாகன ஏர் ஹாரன் சத்தம்| Dinamalar

அலற வைக்கும் வாகன 'ஏர் ஹாரன்' சத்தம்

Added : ஆக 05, 2022 | |
வாகனங்களில் விதிமுறை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் ஒலியால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், கண்டு கொள்ளாமல் இருப்பது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கரூர் மாவட்டத்தில், ஜவுளி மற்றும் பஸ் பாடி கட்டும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் உட்பட


வாகனங்களில் விதிமுறை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் ஒலியால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், கண்டு கொள்ளாமல் இருப்பது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டத்தில், ஜவுளி மற்றும் பஸ் பாடி கட்டும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் உட்பட ஏராளமான வாகனங்கள், உள், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றன. இதனால், எந்த நேரமும், சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியாக காணப்படும்.
இதில், தனியார், அரசு மற்றும் மினி பஸ்களில், 150 டெசிபல் அளவுக்கு மேலான, ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளது. இவை, சாலைகளில் நடந்து செல்பவர்களை, அஞ்சி நடுங்க வைக்கும் விதமாக, அதிக ஒலியை எழுப்பிக்கொண்டு செல்கின்றன. பஸ்கள் மட்டுமின்றி, கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களிலும், ஹெல்லா, ரூட்ஸ் போன்ற, ஏர் ஹாரன்களை பொருத்தி, நகரப்பகுதி ரோடுகளில் அலறவிடுகின்றனர். இதனால், சாலை விபத்து
ஏற்படுவது மட்டுமல்லாது, மனிதருக்கு கேட்கும் திறனும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, காது சிகிச்சை பிரிவு டாக்டர் ஒருவர் கூறியதாவது: பொதுவாக, சராசரி மனிதனின் கேட்கும் திறன் ஒலி அளவு, அதிகபட்சமாக, 80 டெசிபல் இருக்க வேண்டும். பகல் நேரத்தில், ஒலியின் அளவு, 53 டெசிபல், இரவில், 35 டெசிபல் அளவு இருந்தாலே போதுமானது மட்டுமின்றி, பாதுகாப்பானதுமாகும். மேலும், 90 டெசிபலுக்கு மேல் அதிக ஒலியை, ஒருவர் எட்டு மணி நேரத்திற்கு தொடர்ந்து கேட்டால், அவருக்கு காது கேளாமை ஏற்படும். இரவு நேரங்களில், 35 டெசிபலுக்கு மேல் ஒலியை கேட்டால், உறக்கம் இல்லாமை ஏற்பட்டு, உடல் நலமும், மனநலமும் பாதிக்கும்.
மேலும், கருவுற்றிருக்கும் பெண்களின் சிசுவின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, சிசு உருச்சிதைவு ஏற்படும் நிலையும் உருவாகலாம்.
இவ்வாறு, அவர், தெரிவித்தார்.
விதிமுறை மீறி ஏர் ஹாரன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதனை, அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X