புன்னம் பகுதியில் சிக்னல் கிடைக்கல... பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் தவிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பி.எஸ்.என்.எல்., டவர் சிக்னல் கிடைக்காததால் மொபைல் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.க.பரமத்தி ஒன்றியம் புன்னம் பஞ்சாயத்து பகுதியில், பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில், தனியார் மொபைல் நிறுவனங்கள் டவர் அமைக்காததால், பி.எஸ்.என்.எல்., மொபைலை நம்பி இருக்க வேண்டி உள்ளது. ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவன மொபைல்களில் போதிய சிக்னல்

பி.எஸ்.என்.எல்., டவர் சிக்னல் கிடைக்காததால் மொபைல் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.
க.பரமத்தி ஒன்றியம் புன்னம் பஞ்சாயத்து பகுதியில், பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில், தனியார் மொபைல் நிறுவனங்கள் டவர் அமைக்காததால், பி.எஸ்.என்.எல்., மொபைலை நம்பி இருக்க வேண்டி உள்ளது. ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவன மொபைல்களில் போதிய சிக்னல் கிடைக்கவில்லை. பி.எஸ்.என்.எல்., உபயோகிக்கும் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகின்றனர்.
இது குறித்து பி.எஸ்.என்.எல்.,வாடிக்கையாளர்கள் கூறியதாவது:
புன்னம் சுற்று பகுதியில் அதிக வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவை வசதியை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
பழுதடைந்த டவரை சீரமைக்கவில்லை மற்றும் தேவையான டவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அடிக்கடி சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்
படுகிறோம். அப்படி கிடைத்தாலும், நெட் சேவையும் 2ஜி அலைவரிசை மட்டுமே கிடைக்கிறது. இனியாவது சிக்னல் கிடைப்பதற்காக கூடுதல் டவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X