மரவள்ளியில் மாவு பூச்சி தாக்குதல் வேளாண் அதிகாரி விளக்கம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
'மரவள்ளி கிழங்கில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்' என, கிருஷ்ணராயபுரம் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணராயபுரம் வட்டத்தில், 700 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது மாவு பூச்சி தாக்குதலால், பெரும் இழப்பை ஏற்பட்டு வருகிறது.எனவே, பாதிப்புக்குள்ளான செடிகளை

'மரவள்ளி கிழங்கில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்' என, கிருஷ்ணராயபுரம் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணராயபுரம் வட்டத்தில், 700 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது மாவு பூச்சி தாக்குதலால், பெரும் இழப்பை ஏற்பட்டு வருகிறது.
எனவே, பாதிப்புக்குள்ளான செடிகளை உடனடியாக அகற்றுதல் வேண்டும். அகற்றிய செடிகளையும் தீயிட்டு அளித்தல் வேண்டும். இதனால் பூச்சி பரவுதலை தடுக்க இயலும், மண்ணில் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேப்பம் புண்ணாக்கு பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும். மேலும் வயலில் எறும்புகள் நடமாட்டத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், அசாடிராக்டின் மருந்தை 1.5 லிட்டர் தண்ணீரில், 5 மில்லி கலந்து தெளிக்கலாம் அல்லது மீன் எண்ணெய், ரெசின் சோப்பு, 2 மி.லி லிட்டர் நீரில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம், புளோனிகாமைடு 50 வி. ஜி 10 லிட்டர் தண்ணீருக்கு மூணு கிராம் தையாமீதாக்சோம், 25 வி. ஜி, 10 லிட்டர் தண்ணீருக்கு, 5 கிராம் ஸ்பைரோடெட்ரா மேட், 150 ஓ.டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 மில்லி லிட்டர் மேற்கூறிய மூன்று பூச்சி கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
மேலும், 10 நாட்கள் இடைவெளியில் மாற்றி, மாற்றி தெளிப்பதால் மாவு பூச்சியை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X