சம்பா சாகுபடிக்கு தேவையான உரம் கையிருப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
தோகைமலையில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரம் கையிருப்பில் உள்ளதாக தோகைமலை வட்டார வேளாண் உதவி இயக்குநர் அர்ச்சுணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டம், தோகைமலை வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா பருவ சாகுபடி பணிகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப தோகைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா

தோகைமலையில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரம் கையிருப்பில் உள்ளதாக தோகைமலை வட்டார வேளாண் உதவி இயக்குநர் அர்ச்சுணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம், தோகைமலை வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா பருவ சாகுபடி பணிகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப தோகைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா சாகுபடிக்கு ஏற்ற நெல் விதைகள் இருப்பில் உள்ளது. இங்கு, டி.கே.எம்.,-13, பி.பி.டி.,-5204, சி.ஆர்.,-1009, சி.ஓ-., 51, சி.ஓ-.,52, ரகங்களை சேர்ந்த விதைகள் உள்ளன.
இதேபோல் உளுந்து விபிஎன்-8 (வம்பன்) ரக விதைகளும், விதை நேர்த்திக்கு தேவையான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டிரியா, ரைசோபியம் ஆகியவைகளும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. மற்றும் அடியுரமாக பயன்படுத்தக் கூடிய சிறுதானிய நுண்ணுரம், தென்னை நுண்ணுரங்களும் தேவைக்கு ஏற்ப கையிருப்பு உள்ளது.
இதேபோல் இடுபொருள்கள் அனைத்தும் தேசிய மற்றும் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் வழிகாட்டுதலின் படி விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இடுபொருள்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதிக்கான உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது தோகைமலையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேலும் 2022-23 ஆண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோகைமலை, சேப்ளாப்பட்டி, ஆர்ச்சம்பட்டி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவதற்கு பண்ணை கருவிகள், தார்பாய்கள், மின் விசை மற்றும் கை தெளிப்பான், ஜிப்சம் மற்றும் ஜிங்க் சல்பேட் போன்ற இடுபொருள்கள் மானிய விலையில் பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X