'நாட்டின், 75வது சுதந்திரதின அமுதப்பெருவிழாவை கொண்டாடும் வகையில், மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில், தேசியக்கொடி விற்பனைக்கு உள்ளது' என, நாமக்கல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசீப் இக்பால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
பாரத பிரதமர் நரேந்திரமோடி, 75வது ஆண்டு சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும், தேசியக் கொடியை பறக்க விட்டு கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவருக்கும், தேசியக் கொடி எளிதில் கிடைக்கும் வகையில், நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும், இந்திய தேசியக் கொடியானது விற்பனைக்கு உள்ளது.
அதன் விலை, 25 ரூபாய். அதற்கு, ஜி.எஸ்.டி., வரி கிடையாது. இந்திய தேசியக் கொடியை https://www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.
தேசியக்கொடி, தபால்காரர் மூலம், வீடுகளுக்கு பட்டுவாடா செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில், தேசியக்கொடியை, 25 ரூபாய் மட்டும் செலுத்தி பெற்றுக்கொண்டு, சுதந்திரத்தின அமுதம் பெருவிழாவை, இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாட வேண்டும்.
அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும், மொத்தமாக தேசியக்கொடியை வாங்க விரும்பினால், நாமக்கல் கோட்ட தலைமை அஞ்சலக வணிக வளர்ச்சி அலுவலர் சிவக்குமாரை, 98941 12154 என்ற மொபைல் எண்ணிலும், திருச்செங்கோடு தலைமை அஞ்சலக வணிக வளர்ச்சி அலுவலர் சங்கரை, 90428 55559 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.