வெள்ளம் பாதித்த பகுதிகள் ஆறுதல் கூறினார் கலெக்டர்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
குமாரபாளையம் பகுதியில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினார்.மேட்டூர் அணையில் இருந்து, வினாடிக்கு, 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பால், குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக நகராட்சி திருமண மண்டபம் உள்ளிட்ட

குமாரபாளையம் பகுதியில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேட்டூர் அணையில் இருந்து, வினாடிக்கு, 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பால், குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக நகராட்சி திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, அங்கிருந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள பட்டா நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு, மாற்று இடம் வீடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மீண்டும், அடுத்த ஆண்டு இதேபோல் வெள்ளம் ஏற்படும் முன், மாற்று இடம் வழங்கப்படும். மணிமேகலை தெருவில் காவிரி கரையோர பகுதியில், காவிரி நீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க, தடுப்பு சுவர் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டருடன், மாவட்ட எஸ்.பி., சாய் சரண் தேஜஸ்வி, ஆர்.டி.ஓ., இளவரசி, தாசில்தார் தமிழரசி, திருச்செங்கோடு டி.எஸ்.பி., மகாலட்சுமி உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X