ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இளநிலை பாடப் பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
இது குறித்து கல்லூரி பொறுப்பு முதல்வர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆகஸ்ட் 5ம் தேதி சிறப்பு ஓதுக்கீட்டில் கலந்தாய்வு காலை, 9:00 மணி முதல், -10:00 மணிவரை நடைபெறும். இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர்,
என்.சி.சி மற்றும் ராணுவத்தினரும் பங்கேற்கலாம். அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் காலை, 10.30 மணி முதல் மாலை, -5:00 மணி வரை கலந்தாய்வு நடைபெறும். வரும் 8-ம் தேதி காலை, 9:30 மணி முதல், மாலை, 5:00 மணிவரை அறிவியல் பாடத்திற்கும், 10-ம் தேதி காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை கலைப்பிரிவு பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
தரவரிசைப் பட்டியல் படி மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கபட்டுவருகிறது. மேலும் கல்லூரியின் இணையத்தளத்திலும் மாணவர்கள் கட்டணம் மற்றும் தர வரிசைப் பட்டியல் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்ப நகல், ப்ளஸ் 2, ப்ளஸ் 1, பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, 3 நகல்கள், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை அவசியமாக கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.