மாற்று இடமே நிரந்தர தீர்வு: அ.தி.மு.க., 'மாஜி' பேட்டி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
''-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதே தீர்வு,'' என்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். குமாரபாளையம் காவிரி கரையோர வெள்ள பாதிப்புகளை, முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., கூறியபடி, வெள்ள பாதிப்பு மக்களுக்கு, மூன்று வேளையும் உணவு, அ.தி.மு.க., சார்பில் வழங்கப்படும்.ஒரு


''-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதே தீர்வு,'' என்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி
தெரிவித்தார்.
குமாரபாளையம் காவிரி கரையோர வெள்ள பாதிப்புகளை, முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., கூறியபடி, வெள்ள பாதிப்பு மக்களுக்கு, மூன்று வேளையும் உணவு, அ.தி.மு.க., சார்பில் வழங்கப்படும்.
ஒரு சிலர் வெள்ளம் சூழ்ந்த இடத்தை விட்டு வர மறுத்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு வர வேண்டும். முன்பு அமைச்சராக இருந்தபோது இவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருகிறேன் என்று கூறினேன். ஆனால், அவர்கள் அதற்கு மறுத்து விட்டனர். தற்போது மாற்று இடம் கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, நகர செயலாளர் பாலசுப்ரமணி, துணை செயலாளர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் புருஷோத்தமன், முன்னாள் நகர செயலாளர் குமணன், முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுனன், ரவி, உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X