வீட்டைவிட்டு வர தயங்கியவர்களை பரிசலில் அழைத்து வந்தார் சேர்மன்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
-காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் வராத நபர்களை, குமாரபாளையம் சேர்மன் பரிசலில் சென்று அழைத்து வந்தார்.குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் ஒரு சில வீடுகளில் இருப்பவர்கள் வீட்டை விட்டு வர மனமின்றி, உயிரைப்பற்றி கவலைப்படாமல், வெள்ளம் சூழ்ந்த வீட்டில் இருந்தனர். அவர்களை எவ்வளவோ அழைத்தும், பாதுகாப்பு மையத்திற்கு வர


-காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் வராத நபர்களை, குமாரபாளையம் சேர்மன் பரிசலில் சென்று அழைத்து வந்தார்.
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் ஒரு சில வீடுகளில் இருப்பவர்கள் வீட்டை விட்டு வர மனமின்றி, உயிரைப்பற்றி கவலைப்படாமல், வெள்ளம் சூழ்ந்த வீட்டில் இருந்தனர். அவர்களை எவ்வளவோ அழைத்தும், பாதுகாப்பு மையத்திற்கு வர மறுத்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு பரிசலில் சென்ற சேர்மன் விஜய்கண்ணன், வரமறுத்த நபர்களிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி, பரிசல் மூலம் மீட்டு அழைத்து வந்தார். இவர்கள் தற்போது பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சேர்மன் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X