''தென்னிந்திய விமானநிலையங்களில் ராம்ராஜ் காட்டன் ேஷாரூம் விரைவில் திறக்கப்படவுள்ளது,'' என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நாகராஜன் பேசினார்.
திருச்செங்கோடு, சங்ககிரி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ராம்ராஜ் நிறுவனத்தின் புதிய ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் நகை வியாபாரிகள் சம்மேளன பொதுச்செயலாளர் லோகநாதன் ரிப்பன் வெட்டி, ேஷாரூமை திறந்து வைத்தார். முதல் விற்பனையை விருக்ஷா குளோபல் பள்ளி தலைவர் ராஜசேகர் துவக்கி வைத்தார். எஸ்.கே.வி., கல்வி நிறுவனங்களின் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.
திருச்செங்கோடு எம்.எம்.ஏ., ஈஸ்வரன், ஆர்.வி.ஆர்., டவர்ஸ் உரிமையாளர்கள் ரகுநாதன், மாலதி ரகுநாதன், திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி, எஸ்.கே.வி., கல்வி நிறுவனங்களின் பொருளாளர் பாலசுப்ரமணியம், ரோட்டரி சங்க ஆளுநர் சண்முகசுந்தரம், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திறப்பு விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நாகராஜன் பேசியதாவது:
புதிய கிளையில் மிருதுவான பருத்தி நூல் இழைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ராம்ராஜ் நிறுவன தயாரிப்புகளான வேட்டிகள், சர்ட்டுகள், சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகள், பெண்களுக்கு தனிப்பிரிவு என அனைத்தும் உள்ளது. தென்னிந்தியா விமான நிலையங்களிலும் ேஷாரூம்கள் திறக்க உள்ளோம். சிகரம் அறக்கட்ளையில் படித்த பெண் தான், இன்று திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.,யாக பணிக்கு வந்துள்ளார். சிகரம் அறக்கட்டளைக்கு, சென்னை நிறுவன கிளை ஒன்றின் முழு வருமானத்தையும் கொடுத்து வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.