குப்பை கிடங்கு இடமாற்றம் பொதுமக்கள் கடும் அவதி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ப.வேலுாரில் டவுன் பஞ்.,சியில் உள்ள, 18 வார்டுகளிலும், தினசரி, நான்கு லோடு குப்பைகள் சேகரிக்கப்பட்டு, பழைய பைபாஸ் சாலையில் உள்ள பழைய குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர்.தற்போது கடந்த சில நாட்களாக குப்பை கிடங்கில் கொட்டாமல், குடியிருப்பு பகுதி நிறைந்துள்ள சாலையின் ஓரத்திலேயே, புறம்போக்கு இடத்தில் கொட்டி வருகின்றனர்.இதனால் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து, கடும்

ப.வேலுாரில் டவுன் பஞ்.,சியில் உள்ள, 18 வார்டுகளிலும், தினசரி, நான்கு லோடு குப்பைகள் சேகரிக்கப்பட்டு, பழைய பைபாஸ் சாலையில் உள்ள பழைய குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர்.
தற்போது கடந்த சில நாட்களாக குப்பை கிடங்கில் கொட்டாமல், குடியிருப்பு பகுதி நிறைந்துள்ள சாலையின் ஓரத்திலேயே, புறம்போக்கு இடத்தில் கொட்டி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து, கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது மழை பெய்து வருவதால், காற்று அடிக்கும் திசை எங்கும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியை கடந்து செல்பவரும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பழைய குப்பை கிடங்கிலேயே, குப்பை கொட்ட, 2 ஏக்கர் பரப்பளவில் இடம் இருக்கும் நிலையில், ஊரின் மையப்பகுதியில் டவுன் பஞ்., நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவது, பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால், கொட்டிய குப்பைகளை அகற்றி, பழைய இடத்திலேயே குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X