மல்லசமுத்திரம், ராசிபுரத்தில் 1.47 கோடிக்கு பருத்தி ஏலம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மல்லசமுத்திரம் மற்றும் ராசிபுரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், 1.47 கோடி ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்துக்கு, மொத்தம், 2,782 பருத்தி மூட்டைகள் வரத்தாகின. இதில் சுரபிரகம், 100 கிலோ மூட்டை, 10 ஆயிரத்து 620 ரூபாய் முதல், 11 ஆயிரத்து 311 ரூபாய் வரையிலும்,

மல்லசமுத்திரம் மற்றும் ராசிபுரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், 1.47 கோடி ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்துக்கு, மொத்தம், 2,782 பருத்தி மூட்டைகள் வரத்தாகின. இதில் சுரபிரகம், 100 கிலோ மூட்டை, 10 ஆயிரத்து 620 ரூபாய் முதல், 11 ஆயிரத்து 311 ரூபாய் வரையிலும், பி.டி.,ரகம், 10 ஆயிரத்து 400 ரூபாய் முதல், 11 ஆயிரத்து 340 ரூபாய் வரையிலும், கொட்டுபருத்தி, 4,909 ரூபாய் முதல், 9,100 ரூபாய் வரையிலும் ஏலம் போய், மொத்தம், 1.02 கோடி ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.
ராசிபுரம்: ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ்., மூலம் கவுண்டம்பாளையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 1,304 பருத்தி மூட்டைகள் வரத்தாகின. இதில், சாதாரக பருத்தி, 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,312 ரூபாய்க்கும், அதிகபட்சம், 11 ஆயிரத்து 242 ரூபாய்க்கும், உயர்ரக பருத்தி குறைந்தபட்சம், 9,369 ரூபாய்க்கும், அதிகபட்சம், 11 ஆயிரத்து 342 ரூபாய்க்கும், கொட்டு ரகம், 6,505 ரூபாயிலிருந்து, 8,005 ரூபாய் வரை ஏலம் போய், மொத்தம், 1,304 மூட்டைகள் பருத்தி, 45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X