அரை நூற்றாண்டு இருந்த ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மல்லசமுத்திரம் பெரிய ஏரியில், 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்த, ஒன்பது ஏக்கர் நிலம் மீட்கப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மல்லசமுத்திரம் அருகே ஊமையம்பட்டியில், 134.61 ஹெக்டேர் நிலப்பரப்பில் பெரியஏரி அமைந்துள்ளது. திருமணிமுத்தாறு தண்ணீர் இங்கு வருகிறது. இந்த ஏரியின் சுற்றுவட்டார பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த, 12 பேர், ஒன்பது ஏக்கர் நிலத்தை, 50 ஆண்டுகளாக

மல்லசமுத்திரம் பெரிய ஏரியில், 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்த, ஒன்பது ஏக்கர் நிலம் மீட்கப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மல்லசமுத்திரம் அருகே ஊமையம்பட்டியில், 134.61 ஹெக்டேர் நிலப்பரப்பில் பெரியஏரி அமைந்துள்ளது. திருமணிமுத்தாறு தண்ணீர் இங்கு வருகிறது. இந்த ஏரியின் சுற்றுவட்டார பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த, 12 பேர், ஒன்பது ஏக்கர் நிலத்தை, 50 ஆண்டுகளாக ஆக்கிரமித்து, மரவள்ளிக்கிழங்கு மற்றும் பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்து
வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மாயாவி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநிலம் ஆக்கிரமிப்பு குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று காலை, 11மணியளவில், திருச்செங்கோடு தாசில்தார் அப்பன்ராஜ் தலைமையில், பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் மதியழகன், மல்லசமுத்திரம் பி.டி.ஓ.,ரமேஷ், ஆர்.ஐ.,ராஜா, வி.ஏ.ஓ.,க்கள் முன்னிலையில், 50 ஆண்டுகாலமாக இருந்த ஏரி நில ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதனால், ஏரியின் நிலப்பரப்பு அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X