காவிரியில் வெள்ளப்பெருக்கு: மோகனூர் பகுதியில் ஆய்வு| Dinamalar

காவிரியில் வெள்ளப்பெருக்கு: மோகனூர் பகுதியில் ஆய்வு

Added : ஆக 05, 2022 | |
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, மோகனுார் பகுதியில், பொதுமக்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, ஆர்.டி.ஓ., மஞ்சுளா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அதன் முழுக்கொள்ளளவான, 120 அடியை எட்டியது. அதனால், அங்கிருந்து, நேற்று முன்தினம், 1.40 கனஅடி தண்ணீர்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, மோகனுார் பகுதியில், பொதுமக்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, ஆர்.டி.ஓ., மஞ்சுளா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அதன் முழுக்கொள்ளளவான, 120 அடியை எட்டியது. அதனால், அங்கிருந்து, நேற்று முன்தினம், 1.40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று, இரண்டு லட்சத்துக்கு கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேடான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
'காவிரி ஆற்றில் குளிப்பது, கால்நடைகளை விடுவது போன்ற எந்த நடவடிக்கையிலேயும் ஈடுபட வேண்டாம்' என, மாவட்ட நிர்வாகம்
எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், மோகனுார் பகுதிகளில், காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை, நாமக்கல் ஆர்.டி.ஓ., மஞ்சுளா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களின் பாதுகாப்புக்கான எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது தாசில்தார் ஜானகி மற்றும் வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X