சிவகங்கை கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: 27 பேருக்கு ஆயுள் தண்டனை

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சிவகங்கை: கச்சநத்தத்தில், இரு தரப்பினர் மோதலில், மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள், 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தத்தில், 2018ல் கருப்பர் கோவிலில் சாமி கும்பிடும்போது முதல் மரியாதை வழங்குவதில், இரு தரப்பினருக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதில், மூன்று பேர் கொலை
கச்சநத்தம், கொலை வழக்கு, ஆயுள் தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிவகங்கை: கச்சநத்தத்தில், இரு தரப்பினர் மோதலில், மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள், 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தத்தில், 2018ல் கருப்பர் கோவிலில் சாமி கும்பிடும்போது முதல் மரியாதை வழங்குவதில், இரு தரப்பினருக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதில், மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். ஆவரங்காடு, கச்சநத்தத்தை சேர்ந்த, 33 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், 27 பேரையும் குற்றவாளி என அறிவித்தார்.


latest tamil news



'வீடியோ கான்பரன்சிங்' முறையில், சிவகங்கை நீதிமன்றத்தில் இருந்தபடி, மதுரை, திருச்சி, மகளிர் சிறைகளில் இருந்த, 27 பேரிடம் நீதிபதி தீர்ப்பை விளக்கினார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று (ஆக.,5) அறிவிக்கப்பட்டது. அதில், 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார். தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஆக-202213:57:23 IST Report Abuse
ஆரூர் ரங் சொறியார்தான் எல்லா சாதிகளையும் ஒழித்து 🥲விட்டாரே. அப்புறம் எப்படி இந்த சாதிக் கலவரம் நடந்தது. ஏதோ டெல்லி ஆரிய சதி?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
05-ஆக-202213:50:25 IST Report Abuse
jayvee இன்னொருபக்கம் ஜாதி கலவரங்களை தூண்டும்விதமாக பேசி வரும் திருமாவிற்கு மரியாதையை கொடுக்கும் ஊடகங்கள்
Rate this:
Cancel
05-ஆக-202213:06:32 IST Report Abuse
அப்புசாமி எதுக்கு ஆயுள் தண்டனை? அவிங்கள தூக்கில் போட்டு நேரா சாமிகிட்டே மரியாத வாங்க அனுப்ப வேண்டியதுதானே.. இங்கே இருந்தா பெயில்ல, பரோலில் வெளியே வந்து இன்னும் ரெண்டு கொலை செய்வானுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X