தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
தென்மேற்கு பருவமழையின் துவக்கத்தில் இருந்தே, தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. இதனால், மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்தாகி அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.குறிப்பாக, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், 50 அடி உயர சின்னாறு அணையில், 41.64 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. நீர்வரத்து வினாடிக்கு, 373.67 கன


தென்மேற்கு பருவமழையின் துவக்கத்தில் இருந்தே, தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. இதனால், மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்தாகி அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், 50 அடி உயர சின்னாறு அணையில், 41.64 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. நீர்வரத்து வினாடிக்கு, 373.67 கன அடியாக உள்ளது. நாகாவதி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில், 24.60 அடி உயர அணையின் நீர்மட்டம் தற்போது, 9.20 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு, 51 கன அடியாகவும் உள்ளது. மேலும், 65.27 அடி உயர வாணியாறு அணை நீர்மட்டம் தற்போது, 41.98 அடியாக உள்ளதுடன், வினாடிக்கு, 54 கன அடி நீர்வரத்து உள்ளது. கேசர் குழி அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 25.2 அடியில் தற்போது, 18.4 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 24 கன அடி நீர்வரத்து உள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து, விரைவில் அணை பாசன பகுதிகளுக்கு நீர் திறக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X