தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை, 6:30 மணி வரை, மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில், 57 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து, பென்னாகரம், 42, ஒகேனக்கல் 13, தர்மபுரி, 3 என, 115 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில் நேற்று மாலை, 3:30 மணிக்கு மேல் தர்மபுரி


தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை, 6:30 மணி வரை, மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில், 57 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து, பென்னாகரம், 42, ஒகேனக்கல் 13, தர்மபுரி, 3 என, 115 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில் நேற்று மாலை, 3:30 மணிக்கு மேல் தர்மபுரி உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அவதிக்கு ஆளாகினர்.
நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாப்பிரெட்டிப்பட்டியில், 63 மி.மீ., மழை பெய்தது. பென்னாகரம், 57, ஒகேனக்கல், 40, அரூர், 24, பாலக்கோடு, 23, தர்மபுரி, 4 என, மொத்தம், 211 மி.மீ., மழை பதிவானது.
மாணவ, மாணவியர் அவதி
அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்றும் மதியம், 12:30 முதல், அச்சல்வாடி, பேதாதம்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லுார் மற்றும் அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய துவங்கியது. இரவு, 7:00 மணிக்கு மேலாகியும் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பள்ளி, கல்லுாரி சென்ற மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர்.
வீடுகளில் புகுந்த மழைநீர்
ஊத்தங்கரை அருகே கொல்லப்பட்டியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து பஞ்., தலைவரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலின்படி வந்த தாசில்தார் கோவிந்தராஜ், டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மழை நீரோடு கழிவுநீர்
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் சுற்றுவட்டாரத்தில் நேற்று பிற்பகல், 12:00 மணிளவில் இருந்து மழை பெய்தது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழையால், மழை நீர் தேங்கி சாக்கடை கழிவுநீருடன் சேர்ந்து சாலையில் ஆறாக ஓடியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X