பேகேப்பள்ளியில் ஆபத்தை உணராமல் தரை பாலத்தை கடக்கும் பொதுமக்கள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கர்நாடகா மாநில எல்லையில் கன மழையால், அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் ஓசூர் பகுதிக்கு வருகிறது. இந்த தண்ணீர் தமிழக எல்லையிலுள்ள பேகேப்பள்ளி கிராமத்தில் தரைப்பாலத்தை கடந்து செல்கிறது. தரைப்பாலத்தில் அதிகளவு தண்ணீர் செல்வதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர்,


கர்நாடகா மாநில எல்லையில் கன மழையால், அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் ஓசூர் பகுதிக்கு வருகிறது. இந்த தண்ணீர் தமிழக எல்லையிலுள்ள பேகேப்பள்ளி கிராமத்தில் தரைப்பாலத்தை கடந்து செல்கிறது. தரைப்பாலத்தில் அதிகளவு தண்ணீர் செல்வதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், சிப்காட் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இங்கிருந்து ஓசூர், பாகலுார் செல்ல, 10 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டும் என்பதால், ஆபத்தை உணராமல் தண்ணீர் செல்லும் பாலத்தில் மக்கள் சென்று வருகின்றனர். இந்த வழியாக செல்லக்கூடாது என தடுப்பு அமைத்தும், பொதுமக்கள் கண்டு கொள்வதில்லை. கடந்த, 40 ஆண்டுகளாக மழைக்காலங்களில் இதுபோன்ற அவலம் நீடிப்பதால், இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X