காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; மக்கள் பாதிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஈரோடு மாவட்ட காவிரி கரையோரத்தில், தாழ்வான பகுதியில் வசிக்கும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேடான இடங்களிலும், மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு, 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்தாகிறது. அணை நிரம்பி உள்ளதால், முழு அளவில் வரத்து நீரை வெளியேற்றுகின்றனர். இதன்படி நேற்று மாலை, 2.10 லட்சம்


ஈரோடு மாவட்ட காவிரி கரையோரத்தில், தாழ்வான பகுதியில் வசிக்கும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேடான இடங்களிலும், மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு, 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்தாகிறது. அணை நிரம்பி உள்ளதால், முழு அளவில் வரத்து நீரை வெளியேற்றுகின்றனர். இதன்படி நேற்று மாலை, 2.10 லட்சம் கனஅடி நீரை வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் காவிரி கரை ஓரப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி, பவானி, அம்மாபேட்டை, கொடுமுடி உள்ளிட்ட யூனியன் பகுதியில், பல நுாறு குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பவானி, அம்மாபேட்டை பகுதியில் கந்தன் நகர், காவேரி நகர், பாலா காஸ் குடோன் பகுதி, மார்க்கெட் வீதி, பசுவேஸ்வரர் கோவில் பகுதி, குப்பம், பாலக்கரை, வெந்தலை படிக்கட்டு, காடப்பநல்லுார், நேதாஜி நகர் உட்பட பல்வேறு இடங்களில், 800 குடும்பங்களை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்டபங்கள், பள்ளிகள், மகளிர் குழு கட்டடம், சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தவிர நேற்று காலை, 8:10 மணி முதல் ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. மதியம், 1:30 மணி வரை தொடர் மழை பெய்தது. அதன்பின்னும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன், லேசான துாரல் தொடர்ந்து விழுந்தது. இதற்கிடையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, பவானி, அம்மாபேட்டை, கருங்கல்பாளையம் பகுதியில் கரையோர பகுதியை ஆய்வு செய்தார்.
கொடுமுடியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
கொடுமுடியில், காவிரி ஆற்றிங்கரையில் உள்ள, கடைகள் மற்றும் பரிகார கொட்டகைகளை, வெள்ளம் சூழ்ந்தது. மேலும் புகலுாரான் வாய்க்கால் கரையோரத்தில், வடக்குத்தெரு மற்றும் இலுப்புத்தோப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் தண்ணீர் சென்றதால், மக்கள் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து அப்பகுதிவாசிகள், முக்கியமான பொருட்களுடன், அருகில் உள்ள மண்டபங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். சீதாராம கல்யாண மண்டபம், எஸ்.ஏ.பி., மஹால் என இரு தனியார் மண்டபங்களில், 45 குடும்பங்களை சேர்ந்த, 121 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, அடிப்படை வசதிகளை, கொடுமுடி பேரூராட்சி நிர்வாகம், வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கொடுமுடியில், காவிரி கரையோர பகுதிகளில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாக வெளியேற, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இலுப்புத்தோப்பு பகுதியில், 90க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். எச்சரிக்கையை தொடர்ந்து, இதை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர், உடனடியாக அவர்களை வெளியேறும்படி ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொண்டனர். இதையும் மீறி வெளியேறாதவர்களை, கொடுமுடி போலீசார் எச்சரித்து, வெளியேற்றி கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X