சத்தி மோசடி நிறுவனத்தில் ஏமாந்தவர்களா? புகாரளிக்க போலீசார் அழைப்பு| Dinamalar

சத்தி மோசடி நிறுவனத்தில் ஏமாந்தவர்களா? புகாரளிக்க போலீசார் அழைப்பு

Added : ஆக 05, 2022 | |
சத்தியமங்கலம், கிழக்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ், ரிலிப் ஹெர்பல் புராடக்ட் என்ற பெயரில் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலை, 2018 நவ., முதல் 2019 ஆக., வரை செயல்பட்டது. இதன் உரிமையாளர் மற்றும் பங்குதாரர்களாக, கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ், துரைசாமி, புளியங்கோம்பை பிரகாஷ், கோணார்நாயக்கன்பாளையம் ஆனந்தகுமார், பவானி பிரபாகரன், சத்தி, வடக்கு பேட்டை பொன்னுசாமி இருந்தனர்.


சத்தியமங்கலம், கிழக்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ், ரிலிப் ஹெர்பல் புராடக்ட் என்ற பெயரில் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலை, 2018 நவ., முதல் 2019 ஆக., வரை செயல்பட்டது. இதன் உரிமையாளர் மற்றும் பங்குதாரர்களாக, கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ், துரைசாமி, புளியங்கோம்பை பிரகாஷ், கோணார்நாயக்கன்பாளையம் ஆனந்தகுமார், பவானி பிரபாகரன், சத்தி, வடக்கு பேட்டை பொன்னுசாமி இருந்தனர். கவர்ச்சி விளம்பரம் செய்ததில், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மக்கள், முதலீடு செய்தனர்.
ஆனால், கூறியபடி பணத்தை தராததால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சத்தி போலீசில் புகாரளித்தனர். இதன்படி ஆறு பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிந்தனர். இதில் பிரபாகரன், பொன்னுசாமி, துரைசாமியை கைது செய்தனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை, 17 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். ஆனால், நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோட்டில் உள்ள, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். விபரங்களுக்கு, 88073--28868 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X