ஒரு நாயை பிடிக்க ரூ.1,௦௦௦ கட்டணம் :அந்தியூர் டவுன் பஞ்., பதிலால் ஆடுகள் வளர்ப்போர் அதிர்ச்சி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பிரம்மதேசம் புதுாரில், தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில், நாய்களை பிடிக்க, ௧,௦௦௦ ரூபாய் செலவாகும் என்று, டவுன் பஞ்., கூறியுள்ளதால், ஆடு வளர்ப்போர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதுார், மேற்கு தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள், 65; பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை, வீட்டருகே உள்ள தோட்டத்தில், பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். நேற்று


பிரம்மதேசம் புதுாரில், தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில், நாய்களை பிடிக்க, ௧,௦௦௦ ரூபாய் செலவாகும் என்று, டவுன் பஞ்., கூறியுள்ளதால், ஆடு வளர்ப்போர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதுார், மேற்கு தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள், 65; பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை, வீட்டருகே உள்ள தோட்டத்தில், பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஏழு ஆடுகளை கடித்து கொன்றன. சத்தம் கேட்டு சென்ற பெருமாள், நாய்களை விரட்டி விட்டார். பத்து நாட்களுக்கு முன் இதே பகுதியில், வெவ்வேறு இடங்களில் எட்டு ஆடுகளை, நாய்கள் கடித்து கொன்றன. தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவதால், ஆடு வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனால் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று, அந்தியூர் டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது 'ஒரு நாய் பிடிப்பதற்கு, ௧,௦௦௦ ரூபாய் செலுத்த வேண்டும். அப்படி கட்டினாலும், ஒரு மாதம் ஆகும்' என்று, டவுன் பஞ்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் எத்தனை ஆடுகள், தெருநாய்களுக்கு பலியாகுமோ? என்றும், ஆடு வளர்ப்போர் மத்தியில் பீதி அதிகரித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X