சத்தி, பு.புளியம்பட்டியில் எகிறிய மல்லிகை பூ விலை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சத்தியமங்கலம் பூ மார்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ, 1,662 ரூபாய்க்கு ஏலம் போனது. நேற்று, 718 ரூபாய் உயர்ந்து, 2,380 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை-860, காக்கடா-875, செண்டுமல்லி-100, கோழிகொண்டை-82, சம்பங்கி-200, அரளி பூ-280, துளசி-50, செவ்வந்தி-160, கனகாம்பரம்-1,600, ஜாதிமுல்லை, 825 ரூபாய்க்கும் விற்பனையானது. சத்தியமங்கலம்


சத்தியமங்கலம் பூ மார்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ, 1,662 ரூபாய்க்கு ஏலம் போனது. நேற்று, 718 ரூபாய் உயர்ந்து, 2,380 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை-860, காக்கடா-875, செண்டுமல்லி-100, கோழிகொண்டை-82, சம்பங்கி-200, அரளி பூ-280, துளசி-50, செவ்வந்தி-160, கனகாம்பரம்-1,600, ஜாதிமுல்லை, 825 ரூபாய்க்கும் விற்பனையானது. சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழையால், பூப்பறிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் செடியிலேயே பூக்கள் அழுகி விட்டதால் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து விட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டிலும், பூக்கள் விலை நேற்று உயர்ந்தது. நேற்று முன்தினம், ௧,௨௦௦ ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ, 2,400 ரூபாயாக நேற்று உயர்ந்தது. முல்லை கிலோ, 860 ரூபாய்; காக்கடா-875; சம்பங்கி-200; கோழிக்கொண்டை-82; செண்டுமல்லி- 100;, கனகாம்பரம், 1,600 ரூபாய்க்கு விற்றது. மழையால் பாதிப்பு, வரத்து குறைவு என்பதுடன், இன்று ஆடி வெள்ளி என்பதால், பூக்களின் தேவை உயர்ந்தது. விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்று, வியாபாரிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X