தூறல் மழையால் கவிழ்ந்த பஸ் டிரைவர், ௧௦ பயணிகள் காயம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பழநியில் இருந்து ஈரோட்டுக்கு, ஒரு தனியார் பஸ், 30 பயணிகளுடன் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. காங்கேயத்தை சேர்ந்த டிரைவர் தினேஷ், 26, ஓட்டி வந்தார். அரச்சலுார், கண்ணம்மாபுரம் அருகே வந்தபோது, எதிரே வந்த டி.வி.எஸ்., மொபட் மீது மோதாமலிருக்க, திடீர் பிரேக் பிடித்தார். அப்போது துாறல் மழை பெய்து கொண்டிருந்ததால், பிரேக் நிற்காமல், கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஒரு பக்கமாக கவிழ்ந்தது.

பழநியில் இருந்து ஈரோட்டுக்கு, ஒரு தனியார் பஸ், 30 பயணிகளுடன் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. காங்கேயத்தை சேர்ந்த டிரைவர் தினேஷ், 26, ஓட்டி வந்தார். அரச்சலுார், கண்ணம்மாபுரம் அருகே வந்தபோது, எதிரே வந்த டி.வி.எஸ்., மொபட் மீது மோதாமலிருக்க, திடீர் பிரேக் பிடித்தார்.
அப்போது துாறல் மழை பெய்து கொண்டிருந்ததால், பிரேக் நிற்காமல், கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஒரு பக்கமாக கவிழ்ந்தது. டிரைவர் மற்றும் பத்து பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மொபட்டில் வந்த அரச்சலுார் பேரூராட்சி துாய்மை பணியாளர் விஜயா, 35, என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X