போலீஸ் டைரி - சேலம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
வி.ஏ.ஓ.,வை மிரட்டியவர் மீது வழக்குஓமலுார்: தொளசம்பட்டி வி.ஏ.ஓ., முத்துகிருஷ்ணன், 43. இவர், தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்தார். அதில், 'தொளசம்பட்டி தெப்பக்குளம் அருகே வசிக்கும் விவசாயி பிரவீன்குமார், 35. இவரிடம், நீர்நிலை புறம்போக்கில் வீடுகட்டக்கூடாது என்றும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும், கடந்த ஜூலை, 30ல் தெரிவித்தேன். அப்போது, அப்படிதான் கட்டுவேன்

வி.ஏ.ஓ.,வை மிரட்டியவர் மீது வழக்கு
ஓமலுார்: தொளசம்பட்டி வி.ஏ.ஓ., முத்து
கிருஷ்ணன், 43. இவர், தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்தார். அதில், 'தொளசம்பட்டி தெப்பக்குளம் அருகே வசிக்கும் விவசாயி பிரவீன்குமார், 35. இவரிடம், நீர்நிலை புறம்போக்கில் வீடுகட்டக்கூடாது என்றும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும், கடந்த ஜூலை, 30ல் தெரிவித்தேன். அப்போது, அப்படிதான் கட்டுவேன் என தெரிவித்து, தடுத்தால் தீர்த்துக்கட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்' என கூறியிருந்தார். போலீசார், பிரவீன்குமார் மீது கொலை முயற்சி
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

சிறுமியை திருமணம் செய்தவர் கைது
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கரண், 22. பெட்ரோல் பங்க்கில் வேலை செய்கிறார். அவர், நெருங்கிய உறவினரின், 17 வயது சிறுமியை காதலித்தார். கடந்த மாதம், அவரை திருமணம் கொண்டார். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தில், கரணை, நேற்று கைது செய்தனர்.

நகை, பணம் பறித்தவருக்கு "காப்பு'
சேலம்: அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் அருண்குமார், 30. நேற்று காலை, 8:30 மணிக்கு, தாதகாப்பட்டி, சண்முகா நகர் சந்திப்பில் நின்றிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி, 2.6 பவுன் தங்க சங்கிலி, 1,700 ரூபாயை பறித்துக்கொண்டார். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்ததில், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த மார்ட்டின், 43, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பணம், சங்கிலியை மீட்டனர்.

ஆம்னி வேன் மோதி முதியவர் பலி
சேலம்: வட்டமுத்தாம்பட்டி, எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 60. நேற்று முன்தினம் மாலை, 5:45 மணிக்கு, அதே பகுதியில், சின்னப்பையன் ஆட்டு இறைச்சி கடை அருகே நடந்து சென்றார். அப்போது, சேலம் நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன், அவர் மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த மாரியப்பனை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் கார் மெக்கானிக் சாவு
ஓமலுார்: தொளசம்பட்டியை சேர்ந்தவர் ரவி, 51. சேலத்தில் உள்ள கார் நிறுவனத்தில், மெக்கானிக்காக பணிபுரிந்தார். நேற்று காலை, 9:30 மணிக்கு, 'ஆக்டிவா' மொபட்டில், ஓமலுாரில் இருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். புளியம்பட்டி அருகே சென்றபோது, கன்டெய்னர் லாரி, மொபட் பின்புறம் மோதியது. அதில், சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி ரவி உயிரிழந்தார். ஓமலுார் போலீசார், லாரியை கைப்பற்றி தப்பிய டிரைவரை தேடுகின்றனர். இறந்த ரவிக்கு, மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

ரேஷன் அரிசி பதுக்கியவர் வளைப்பு
சேலம்: ஆட்டையாம்பட்டியில் இருந்து ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தப்பட உள்ளதாக, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. அதனால் போலீசார், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டியில் உள்ள கோபால், 47, வீட்டில், நேற்று சோதனை நடத்தினர். அப்போது, 21 மூட்டைகளில், 1.05 டன் ரேஷன் அரிசி இருந்தது. பறிமுதல் செய்த போலீசார், பதுக்கி வைத்திருந்த கோபாலை கைது செய்தனர். விசாரணையில், கிராமங்களில் ரேஷன் அரியை குறைந்த விலைக்கு வாங்கி, பெங்களூருவில் விற்று வந்தது தெரிந்தது.

மாடியிலிருந்து விழுந்த 'குடி'மகன்
சேலம்: சேலம், பழைய சூரமங்கலம், நேரு தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் தீபன் சக்கரவர்த்தி, 30. கட்டட தொழிலாளி. இவரது மனைவி அனுசுயா, 28. இவர், இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கோவையில் உள்ள தாயை பார்க்க சென்றிருந்தார். இந்நிலையில், வீட்டில் தனியே இருந்த தீபன் சக்கரவர்த்தி, நேற்று முன்தினம் இரவு மது அருந்தினார். பின், வீட்டின் முதல் மாடியில், தடுப்பு கம்பி மீது அமர்ந்து மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவு, 11:30 மணிக்கு, கால் இடறி அந்த வீட்டின் சந்தில் விழுந்து பலியானார். நேற்று காலை, மக்கள் தகவல்படி சூரமங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

கணவர் தாக்குதல்; மனைவி விபரீதம்
தலைவாசல்: சிறுவாச்சூர் ஊராட்சி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த விவசாயி அருள்ஜோதி, 30. இவர், 2019ல், உத்ரா, 24, என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, 3 வயது, 8 மாத பெண் குழந்தைகள் இருந்தனர். 8 மாத பெண் குழந்தை மண் அள்ளி சாப்பிட்டு வந்ததால், உத்ரா, குழந்தை வாயில் மிளகாய் வைத்துள்ளார். இதனால், அருள்ஜோதி கண்டித்து தாக்கியுள்ளார். இதில் மனமுடைந்த உத்ரா, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

மின்சாரம் பாய்ந்து 2 பசு இறப்பு
ஆத்துார்: ஈச்சம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி விஜயமூர்த்தி, 40. இரு பசு மாடுகளை, நேற்று, மாட்டுக்கொட்டகையில் கட்டியிருந்தார். இரவு, 7:00 மணிக்கு வந்து பார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து, பசுக்கள் இறந்து கிடந்தன. வருவாய், மின்வாரியத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தார். மேலும், மல்லியக்கரை போலீசாரும் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X