'ராங் ரூட்'டில் வந்த கல்லூரி பஸ் கணவர் பலி; மனைவி படுகாயம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
'ராங் ரூட்'டில் வந்த, தனியார் கல்லுாரி பஸ், கார் மீது மோதியதில், சென்னையில் பணியாற்றிய இன்ஜினியர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.சென்னை, தி.நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 50. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ. இவர்கள், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் மகளை விட்டுவிட்டு, நேற்று காலை சென்னை நோக்கி,

'ராங் ரூட்'டில் வந்த, தனியார் கல்லுாரி பஸ், கார் மீது மோதியதில், சென்னையில் பணியாற்றிய இன்ஜினியர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
சென்னை, தி.நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 50. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ. இவர்கள், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் மகளை விட்டுவிட்டு, நேற்று காலை சென்னை நோக்கி, 'குவாலிஸ்' காரில் சென்றுகொண்டிருந்தனர்.
வாழப்பாடி, புதுப்பாளையத்தில், சேலம் - சென்னை புறவழிச்சாலையில் சென்றபோது, ஆத்துாரில் இருந்து சேலம் நோக்கி வந்த, தனியார் மகளிர் கல்லுாரி பஸ், 'ராங் ரூட்'டில் வேகமாக வந்து, கார் மீது மோதியது. அதில் ராஜேஷ்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சுபஸ்ரீ படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். வாழப்பாடி போலீசார், ராஜேஷ்குமார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இச்சம்பவத்தால், 3 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X