போக்குவரத்து துண்டிப்பு: வீடுகளில் முடங்கிய மக்கள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஏற்காட்டில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது. நாகலுார், மரப்பாலம் பகுதியில் சிறு ஓடை உள்ளது. அதில் அதிகளவில் மழை நீர் வந்து, சாலையில் பெருக்கெடுத்து சென்றதால், அந்த இடமே ஆறு போல் காட்சியளித்தது. தொடர்ந்து, மழைநீர் ஊருக்குள் புகுந்து சாலையில் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கற்கள் முதல் மரக்கிளைகள் வரை



ஏற்காட்டில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது. நாகலுார், மரப்பாலம் பகுதியில் சிறு ஓடை உள்ளது.
அதில் அதிகளவில் மழை நீர் வந்து, சாலையில் பெருக்கெடுத்து சென்றதால், அந்த இடமே ஆறு போல் காட்சியளித்தது.
தொடர்ந்து, மழைநீர் ஊருக்குள் புகுந்து சாலையில் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கற்கள் முதல் மரக்கிளைகள் வரை அடித்துச்செல்லப்பட்டன.
அதிக அளவில் சென்ற தண்ணீரால், நாகலுார் வழியே, 15க்கும் மேற்பட்ட கிராமத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கட்டடம், காபி தோட்ட பணிக்கு செல்லும் மக்கள், வேலைக்கு போக முடியாமல் வீடுகளில் முடங்கினர்.
மாணவர்கள் அவதி
சேலத்தில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு தொடங்கிய மழை, 6:00 மணி வரை நீடித்தது. பல இடங்களில் கனமழை, சில இடங்களில் சாரல் மழையாக நீடித்ததால், பள்ளி விட்டு குழந்தைகளை அழைத்துச்சென்ற பெற்றோர், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் மழைநீர் ஓடியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகள் குட்டையாக மாறின.
நேற்று காலை வரை, கெங்கவல்லியில், 19 மி.மீ., ஆணைமடுவு, 5, ஏற்காடு, 4, வீரகனுார், 2, சேலம், 0.1 மி.மீ., மழை பதிவானது.
சீரழிந்த சாலை
பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, நல்லியாம்புதுாரில் இருந்து, பள்ளித்தெருப்பட்டி ஊராட்சிக்கு செல்லும் சாலை, மழையால் சேறு சகதியாக மாறியுள்ளது. கம்மாளப்பட்டி, குரால்நத்தம், திப்பம்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து மல்லுார், ராசிபுரம், நாமக்கல் செல்லும் மக்கள், இச்சாலையை பயன்படுத்துகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால், அச்சாலை சீரழிந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர். அச்சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X