விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்., போராட்டம்: ராகுல் , பிரியங்கா கைது

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
புதுடில்லி: விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்ற ராகுல், சசி தரூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.,க்களை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு பேரணியாக செல்ல முயன்ற பிரியங்காவையும் போலீசார் கைது செய்தனர்.பார்லிமென்டில் மழைக்காலக்
Congress, Rahul, Detained, Protest, காங்கிரஸ், ராகுல், கைது, போராட்டம், விலைவாசி உயர்வு, டில்லி, பேரணி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்ற ராகுல், சசி தரூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.,க்களை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு பேரணியாக செல்ல முயன்ற பிரியங்காவையும் போலீசார் கைது செய்தனர்.

பார்லிமென்டில் மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்டவை பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து 3 வாரங்களாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப் படுகின்றன.


latest tamil news



இந்த நிலையில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்., மேலிடம் அறிவித்தது. இதனையடுத்து பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டு டில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து பார்லியில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். பார்லி வளாகத்தில் காங்., தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்ட எம்.பி.,க்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர்.


latest tamil news


Advertisement

அதனைத்தொடர்ந்து ராகுல் தலைமையில் சில எம்.பி.,க்கள் பார்லியில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியாக சென்ற ராகுல், சசி தரூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.,க்களை போலீசார் கைது செய்தனர். அப்போது ராகுல் கூறுகையில், ‛அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்னையை எழுப்புவதற்காக, ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால் எங்களை இங்கிருந்து முன்னேற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். மக்களின் பிரச்னைகளை எழுப்புவதே எங்கள் வேலை, சில எம்.பி.,க்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டனர்' என்றார்.


latest tamil news




காங்கிரஸ் போராட்டம் தொடர்பாக அக்கட்சி எம்.பி., ப.சிதம்பரம் கூறுகையில், ‛விலைவாசி உயர்வு, அக்னிபத் உள்ளிட்ட பிரச்னைகளுக்கான போராட்டம் இது. விலைவாசி உயர்வு அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அரசியல் கட்சிகள் என்ற ரீதியிலும், மக்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியிலும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். அதை தான் செய்து வருகிறோம்' என்றார்.



பிரியங்கா கைது


latest tamil news



காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாக செல்ல கிளம்பினர். இதனையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பிரியங்கா கூறுகையில், எதிர்க்கட்சிகளை நசுக்கி விட முடியும் என பா.ஜ., நினைக்கிறது. பணவீக்கத்தை அமைச்சர்கள் பார்க்க மறுக்கின்றனர். எனவே, அவர்களுக்கு காட்டுவதற்காக நாங்கள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி சென்றோம். நாட்டின் சொத்துகளை, தனது நண்பர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்துவிட்டார் எனக்கூறினார்.


latest tamil news



கைது செய்யப்பட்ட ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் போலீஸ் லைன்ஸ் கிங்ஸ்வே முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.




நாடு முழுவதும் போராட்டம்


latest tamil news


விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது. தலைநகரங்களில், கவர்னர் மாளியையை முற்றுகையிட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஆக-202219:57:07 IST Report Abuse
Radhakrishnan நேஷனல் ஹெரால்டு விசாரணை மூலம் இவர்களின் அடி மடியில் கை வைத்து விட்டார்கள் போலும், அது தான் இந்த கதறல் 😂🤣
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
05-ஆக-202219:49:12 IST Report Abuse
Vena Suna பிரியங்கா அண்ணனை பார்த்து ஒரு கேள்வி கேட்டது நெஞ்சை துளைக்கின்றது. "நீ ஏன் மோடியை கட்டி பிடிக்சே?" என்பது தான் அது.
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
05-ஆக-202219:42:37 IST Report Abuse
மனிதன் உண்மையில், காங்கிரஸ் ஆளும்பொது, அவர்கள் கொஞ்சம் கொள்ளையடித்தாலும், மக்களுக்கு எந்த பாதிப்பும் இருந்ததில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X