சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை: ராஜ்யசபாவில் வாசன் வலியுறுத்தல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
''சென்னையில், உச்சநீதிமன்றத்தின் தென்மண்டல கிளையை அமைக்க வேண்டும்,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.ராஜ்யசபாவில், அவர் பேசியதாவது: பழைய சட்டங்கள் அனைத்தையும், உரிய முறையில் திருத்தம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார். நீதிமன்றங்களில் 4.70 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறியிருக்கிறார். அதில் உச்சநீதிமன்றத்தில் மட்டும் 72

''சென்னையில், உச்சநீதிமன்றத்தின் தென்மண்டல கிளையை அமைக்க வேண்டும்,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

ராஜ்யசபாவில், அவர் பேசியதாவது: பழைய சட்டங்கள் அனைத்தையும், உரிய முறையில் திருத்தம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார். நீதிமன்றங்களில் 4.70 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறியிருக்கிறார். அதில் உச்சநீதிமன்றத்தில் மட்டும் 72 ஆயிரம் வழக்குகள் உள்ளன. நாட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில், உச்சநீதிமன்றத்தின் மண்டல கிளைகளை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.

சென்னை உயர்நீதிமன்றம், 150 ஆண்டுகளுக்கு மேலான நீண்ட வரலாறு கொண்டது. மதுரையில் ஒரு கிளை உள்ளது. இது மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு, நீதியை அணுக உதவுகிறது. தமிழக அரசின் நீதித்துறை மரபுகளைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் தென்மண்டல கிளை, சென்னையில் அமைக்கப்பட்டால், டில்லி பயணிக்க முடியாத வழக்கறிஞர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும்.இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X