புதுடில்லி: ஜிஎஸ்டி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாறி மாறி குற்றம் சுமத்தி வந்தனர். இதற்கிடையே அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான தேதிகளை இறுதி செய்வதற்காக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டில்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இச்சந்திப்பு 15 முதல் 20 நிமிடங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement