'2ஜி' மேல்முறையீட்டு வழக்கில் தினமும் விசாரணை: சி.பி.ஐ., மனு

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தினமும் விசாரணை நடத்த வேண்டும் என டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது.காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், அரசுக்கு 1.76 லட்சம்
CBI, daily hearing, 2G, Spectrum, Scam Case, delhi high court, highcourt, சிபிஐ, 2ஜி, ஸ்பெக்டரம் வழக்கு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தினமும் விசாரணை நடத்த வேண்டும் என டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தரப்பில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., வைச் சேர்ந்தவருமான ராஜா, அந்த கட்சி எம்.பி., கனிமொழி உள்ளிட்ட, 14 பேரையும், 2017 டிசம்பரில், சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. 'குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க, சி.பி.ஐ., தவறி விட்டது' என, அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், 2018 மார்ச்சில், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் கடந்த 2 ம் தேதி விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., மேல்முறையீட்டு மனு தொடர்பாக சி.பி.ஐ., தரப்பு வாதங்களை அடுத்த மாதம் செப்., 22, 23 தேதிகளில் முன் வைக்க அனுமதி அளித்து டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா உத்தரவிட்டார்.


latest tamil newsஇந்நிலையில், டில்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் தாக்கல் செய்த மனு: 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தினமும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு , முக்கியத்துவம் வாய்ந்தது. பொது வாழ்வில் நன்னடத்தை, அதிகாரிகளின் நேர்மை தொடர்பான பிரச்னைகள் சம்பந்தப்பட்டது. தேசியளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வழக்கு என்பதால் விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கு பொது மக்களின் நலன்களை உள்ளடக்கியது என்பதால், வழக்கு மற்றும் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, நீதித்துறையின் நலனுக்காக மேல்முறையீட்டு மனுவை தினமும் விசாரிக்க வேண்டும். வாதங்களை துவக்குவதற்கான நாளை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202212:08:03 IST Report Abuse
அப்புஜ்ஜி 2 ஜி செத்துப்போய் 5 ஜி வந்துடுஜ்ஜி. மண்மோகன் ஜி போய் மோடிஜி வந்தாஜ்ஜி. குற்றம் செஞ்சிருந்தாலும், செய்யாட்டாலும் எல்லோரும் விடுதலை ஆயாஜ்ஜி. விசாரணை செஞ்சு இன்னிமே என்ன ஆகப்போகுது ஜீ...
Rate this:
Cancel
05-ஆக-202220:26:25 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ராஜா WAITING
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
05-ஆக-202220:18:51 IST Report Abuse
Dhurvesh ஏ.ராசா குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் அவர் மேலே பொய்குற்றச்சாட்டுகளை கூறி, நடக்காத ஊழலை பூதாகாரமாக்கி,மீடியா ட்ரையல் செய்து ஆட்சியை பிடித்தவர்கள்தான் பாஜகவினர்முன்னாள் தகவல்,தொழில் நுட்ப துறை அமைச்சராக இருந்து,வீண்பழி சுமத்தப்பட்டதாலும், அலைக்கற்றை விஷயத்தில் தொழில் நுணுக்கங்களை அறிந்துள்ளதாலும் ,5G ஏலத்தில்,அரசு எதிர்பார்த்த விலை கிடைக்காதது ஏன் என்று கேட்பதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டுஅவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல இயலாதவர்கள், அவருக்கு கேள்வி கேட்க தகுதி இல்லை என்று கூறி மடைமாற்றுகிறார்கள்ராசா பின்வரும் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்-வெறும் 30 MHz திறன் கொண்ட 2G ஒதுக்கீட்டை செய்தபோது,அந்த ஒதுக்கீட்டினால் 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று கூறினார்கள்இப்போது ஏலம் விடப்பட்டது 51 GHzஅதாவது MHz ஐ விட GHz இன் திறனும் அளவும் 20 மடங்கு அதிகமாகும் 2G யில் குரல் மட்டும்தான் சென்றடையும்3G யில் வீடியோக்களை காணமுடிந்தது4G யில் அதன் திறன் அதிகரித்தது5G யில் நாம் தேடும் விஷயங்கள் ஒரு நொடியில் வரும்5G யின் மதிப்பு 4.3 லட்சம் கோடி என்று அரசே மதிப்பிட்டிருந்ததுஏலம் விட தீர்மானித்திருந்த 72098 MHz (72 GHz)இல் 51236 MHz (51 GHz)தான் விற்கப்பட்டிருக்கிறதுஅதாவது,71% விற்கப்பட்டிருக்கிறது அரசு மதிப்பீட்டின்படியே,இந்த விற்பனையில் 3 லட்சம் கோடி கிடைத்திருக்கவேண்டும்ஏன் 1.5 லட்சம் கோடிக்குத்தான் விற்கப்பட்டிருக்கிறது?என்றுதான் அவர் கேட்டிருக்கிறார்.
Rate this:
06-ஆக-202211:39:13 IST Report Abuse
ஆரூர் ரங்உங்க உளறலை ஏற்றுகொள்ள நாங்கள் இளிச்சவாயன் இல்லை. வாடகை சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்த ராசா இப்போது கோடி ரூபாய் அன்னிய சொகுசு காரில் சுற்றுவது யார் பணத்தில் ? ஆ.ராசா ஒதுக்கிய 122 2ஜி லைசென்ஸ்களும் முறைகேடாக ஒதுக்கப்பட்டவை எனக் கூறி சுப்ரீம் கோர்ட் கேன்சல் செய்துவிட்டது. இது தெரிந்தும் ஏன் இந்த ஆளுக்கு முட்டுக் கொடுக்கிறீர்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X