போதைப் பொருளை ஒழிக்க ஒத்துழைப்பு: எம்எல்ஏ.,க்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை: போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து எம்எல்ஏ.,க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு
Tamilnadu CM, Stalin, MLAs, Letter, போதைப்பொருள், தமிழகம், ஸ்டாலின், முதல்வர், எம்எல்ஏ, கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து எம்எல்ஏ.,க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பெருட்களின் பாதிப்புகள் குறித்து உங்களின் கவனத்தை ஈர்க்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். சமூகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும். போதைப் பாதை அழிவுப் பாதை என்பதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனைப் பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி, மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறார்கள்.


latest tamil news


போதைப் பொருட்கள் அவர்களது சிந்தனையை அழித்து விடுகிறது, வளர்ச்சியை தடுத்து விடுகிறது. எதிர்காலத்தை பாழாக்கி, அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது. இது சமூகத்தின் - நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது. சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும், யாரும் சிறிதளவு கூட பயன்படுத்தாமல் தடுத்தாக வேண்டும். போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அரசின் மிக முக்கிய கடமையாக நினைக்கிறேன். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.


latest tamil news




விழிப்புணர்வு நாள்


இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஆக.,11ம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்துள்ளோம். அன்றைய நாள், பள்ளி - கல்லூரிகளில் இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போதையின் தீமைகள் குறித்த காணொளிக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படும். அன்றைய நாள், தங்களது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தாங்களும் தவறாது பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.



அரசியல் பிரச்னை அல்ல


இது அரசியல் பிரச்னை அல்ல, நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்னை. குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை குறித்த பிரச்னை. எனவே எம்எல்ஏ.,க்கள் இதில் பங்களிப்பினை வழங்கிட வேண்டும். தொடர்ச்சியான பிரசாரத்தின் மூலமாகத்தான் போதைப் பொருட்களின் தீமையை உணர்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் (எம்எல்ஏ.,க்கள்) ஒத்துழைப்பு மிகமிக அவசியம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பிரதமருக்கு கடிதம்

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், என்.எல்.சி திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஆக-202212:03:47 IST Report Abuse
அப்புசாமி யோகியாருக்கும், அமித்ஷாவுக்கும்.கடிதம் எழுதுங்க. போதை சாக்கலேட்டுகள் மேட் இன் உ.பி.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
06-ஆக-202201:58:06 IST Report Abuse
BASKAR TETCHANA இப்போதே மந்திரிகள் எம்.எல்.எ.க்கள் முதல்வர் சொல்வதை கேட்பதில்லை. இந்த கேட்சேனத்தில் போதை பொருள் தடுக்க ஒத்துழைப்பு கேட்கிறார். திருடனிடமே இனி நீ திருடாதே என்பது போல் உள்ளது. இந்த போதை பொருளை கடத்தி கொண்டு வருவது எல்லாமே உங்கள் உடன்பிறப்புகள். இதை கண்டு கொள்ளாமல் இருக்க தான் போலீசார்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஆக-202200:15:51 IST Report Abuse
Vena Suna முதல்வரே,அப்போ இவ்வளவு நாள்,அவங்க ஏன் உங்களுக்கு ஒத்துழைக்கலை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X