வீட்டுக்கடனுக்கான வட்டி உயர்வை சமாளிப்பது எப்படி ?

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ரெபோ வட்டி விகித உயர்வால், வீட்டுக்கடன் இ.எம்.ஐ., மேலும் அதிகரிக்கும். இதனால் வங்கிக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமையை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 3வது முறையாக ரெபோ விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது.
வீட்டுக்கடன், வட்டி உயர்வு, ரெபோ வட்டி உயர்வு, ரிசர்வ் வங்கி, பணவீக்கம், டெபாசிட், வங்கிகள், வாடிக்கையாளர்கள்,Reserve bank, inflation


ரெபோ வட்டி விகித உயர்வால், வீட்டுக்கடன் இ.எம்.ஐ., மேலும் அதிகரிக்கும். இதனால் வங்கிக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமையை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.


பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 3வது முறையாக ரெபோ விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 140 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளது.

அக்டோபர் 1, 2019க்கு பிறகு அனைத்து குறுகிய கால கடன்களும் ரெபோ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெபோ விகிதம் உயர்த்தப்படும் போது, நேரடியாக வங்கிகளில் கடன் பெற்றவர்களின் வட்டி விகிதங்களும் உயரும். ரெபோ விகித உயர்வு, அடமான மற்றும் அனைத்து வகை கடனுக்கும் பொருந்தும்.

குறிப்பாக வங்கிகளில் வீட்டுக்கடன் பெற்றோருக்கு இது அதிகபட்சமாக சுமையை ஏற்படுத்தும். வட்டி விகிதங்கள் உயரும் போது, வங்கிகள் பொதுவாக இ.எம்.ஐ தொகையை அதிகரிக்காமல், தவணையை திருப்பி செலுத்தும் காலத்தை அதிகரிக்கும். 15- 30 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு வட்டி கணிசமாக உயரும்.

உதாரணமாக, ரூ.30 லட்சம் தொகையை, 7.4 சதவீத வட்டியில் 20 ஆண்டுகள் தவணை காலத்தில் ஒருவர் பெற்றுள்ளார். எனில், வட்டி உயர்வால் கூடுதலாக 24 மாதங்கள் தவணையை செலுத்த நேரிடும்.


20 ஆண்டுகளுக்கு 7.5 சதவீத வட்டிக்கு, ரூ.1 கோடி அளவிற்கு வீட்டுக்கடன் பெற்றுள்ள ஒருவரின் தவணை காலம் 240 மாதங்களில் இருந்து 265 தவணை காலமாக அதிகரிக்கும். இதன் மூலம் கடன் பெற்றுள்ள நபர் ரூ.20 லட்சம் கூடுதலாக செலுத்த நேரிடும். இதற்குப் பதிலாக இ.எம்.ஐ., தொகை அதிகரிக்கப்பட்டால், வழக்கமான தொகையுடன், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 3,085 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். வட்டி சுமையின் ஒட்டுமொத்த அதிகரிப்பு ரூ.7.4 லட்சமாக இருக்கும்.

இதுதவிர, டிசம்பர் மற்றும் மார்ச் 2023க்குள் மேலும் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க கூடுமென கூறப்படுகிறது. வீட்டுக்கடன் பெற்றோர், வட்டி உயர்வை சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வட்டி குறைப்பால், வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்தது. வட்டி விகித உயர்வால், வீடுகளுக்கான தேவை சமனடைந்து, ரியல் எஸ்டேட் துறையில் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்.


வட்டி விகித உயர்வை சமாளிப்பது எப்படி ?


நீண்ட கால கடன்களான வீட்டுக்கடனில் நீங்கள் குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. வட்டி உயரும் சூழலில், மாதாந்திர தவணை தொகை செலுத்துவதை மாற்றி, வட்டி உயர்வை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். நீங்கள் செலுத்தும் சில ஆயிரங்கள், நீண்ட காலமாக செலுத்தும் வட்டி தொகையை குறைக்கும்.


latest tamil newsமுன்கூட்டியே செலுத்த தொகை இல்லாதபட்சத்தில், மாதாந்திர தவணை தொகை 5 முதல் 10 சதவீதம் அளவுக்கு உயர்த்தலாம். அல்லது ஆண்டுக்கு ஒரு இ.எம்.ஐ., தொகையை அதிகமாக செலுத்தி வரலாம். தற்போது ரெபோ விகிதம் 5.40 சதவீதமாக உள்ளது. தற்போதைய நிலையில், வீட்டுக்கடன்களுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.90 முதல் 8.15 சதவீதம் வரை இருக்கலாம். நீங்கள் உங்கள் வீட்டுக்கடனுக்கு இதை விட அதிகமான வட்டி செலுத்தி வந்தால், வேறு வங்கிக்கு மாற்றி கொள்ளலாம். இதன் மூலம் வட்டி உயர்வு தொகையை ஓரளவு சேமிக்க இயலும்.


டெபாசிட் செய்வோருக்கு எப்படி ?வங்கிகளின் கடன் பெற்றோர் வட்டி விகித உயர்வால் தங்களது அணுகுமுறையை மாற்றி கொள்ள வேண்டிய சூழலில், டெபாசிட் செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக கருதப்படுகிறது. இதுவரை டெபாசிட்களுக்கு குறைந்த சதவீதத்தில் வட்டி பெற்றோருக்கு, இது உண்மையில் நல்ல காலமாகும். உடனடியாக இல்லையெனிலும், வரும் காலங்களில் வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த கூடும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க குறுகிய கால நிரந்தர வைப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம். வட்டி உயரும் போது, விரைவில் குறுகிய கால வைப்பு முதிர்வடையும்.


latest tamil newsகுறிப்பாக சீனியர் குடிமகன்களுக்கு வட்டி விகித உயர்வு நல்ல செய்தியாகும். ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை குறுகிய கால முதலீட்டில் வட்டி விகித உயர்வு குறிப்பிடத்தக்க அளவில் லாபத்தை தரும். வரி சேமிப்பு திட்டங்களின் நன்மைகளையும் பெற இயலும். நிரந்தர வைப்பு திட்டங்களின் மூலம் 8 லட்சம் வரையிலும் வருமானம் ஈட்டும், சீனியர் குடிமகன்கள் 80 சி விதிகளின் கீழ் வரி சலுகைகளை பெறலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஆக-202220:09:15 IST Report Abuse
Saminathan S 20 years loan எதுத்து இருந்தா 24 EMI increase ஆகும் என்ன சொல்லுறிங்க. public-க்கு அட எப்படி சமாளிப்பது என்ன solluringa.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
05-ஆக-202220:23:25 IST Report Abuse
Visu Iyerநல்ல ஜி யா பார்த்து ஒட்டு போடுங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X