ஆக்கிரமிப்பு வழக்கில் மன்னிப்பு கோரினார் தாசில்தார்

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தில் பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ல் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 12 வாரங்களில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி கலசப்பாக்கம் தாசில்தாருக்கு உத்தரவிட்டது. 2017 டிசம்பரில் இந்த உத்தரவு
ஆக்கிரமிப்பு வழக்கில் மன்னிப்பு கோரினார் தாசில்தார்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தில் பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ல் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 12 வாரங்களில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி கலசப்பாக்கம் தாசில்தாருக்கு உத்தரவிட்டது. 2017 டிசம்பரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை அமல்படுத்தவில்லை என உயர் நீதிமன்றத்தில் 2018ல் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நிலுவையில் இருந்த இந்த வழக்கு 2022 ஜூன் மாதம் தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. நான்கு வாரங்களில் உத்தரவை அமல்படுத்துவதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. நான்கு ஆண்டுகளாக உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறிய 'முதல் பெஞ்ச்' சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு சிறை தண்டனை விதிக்க போவதாக தெரிவித்தது.

இதையடுத்து இரண்டு நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டும் அதை ஏற்க மறுத்த முதல் பெஞ்ச் கலசப்பாக்கம் தாசில்தாராக இருந்த பெண் அதிகாரியை குற்றவாளி என அறிவித்தது.தண்டனை விபரத்தை அறிவிக்க இன்று( ஆக.,5ம் தேதி )ஆஜராகும்படி உத்தரவிட்டது. இதன்படி பெண் தாசில்தார் லலிதா உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றாததற்கு மன்னிப்பு கோரினார். இதனை நீதிமன்றம், ஒரு நாள் மட்டும் நீதிமன்றத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் 3 வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஆக-202207:17:41 IST Report Abuse
D.Ambujavalli அந்த ஆக்கிரமிப்பை அனுமதிக்க யாரிடம் வாங்கினாரோ அவரிடம் ' ஐயா சாமி, நீங்க கொடுத்ததை வேணும்னாலும் வட்டியோடு தரேன், என்னை ஜெயிலுக்கு அனுப்பிடாதீங்க' என்று காலில் கையில் விழுந்து அகற்றியாக வேண்டும் இதில் ஒருநாள் நீதிமன்ற பார்வையாளர் …… எவ்வளவு பெரிய தண்டனையின்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-202206:34:10 IST Report Abuse
Mani . V "......இதனை நீதிமன்றம், ஒரு நாள் மட்டும் நீதிமன்றத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிக்கும்படி உத்தரவிட்டனர்....." இது அவ்வளவு பெரிய தண்டனையா? பாவம் அந்த தாசில்தார்.
Rate this:
Cancel
Ramesh - Chennai,இந்தியா
05-ஆக-202219:46:18 IST Report Abuse
Ramesh மன்னிப்பு கேட்டாச்சு. காரி துப்பியதை துடைச்சு போட்டு விட்டு சம்பாதிக்கிற அடுத்த வேலையை கவனிக்க வேண்டியது தான். அரசு அதிகாரிகள் திருந்தவே மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X