மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா பதவிக்காலம் நீட்டிப்பு

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: மத்திய அமைச்சரவை செயலாளரான ராஜிவ் கவுபாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரவை செயலாளராக இருப்பவர் ராஜிவ் கவுபா. இவரது பதவிக்காலம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நீட்டிப்பு பதவிக்காலமும் முடிவடைய உள்ள நிலையில் தற்போது மேலும்
Cabinet Secretary, Rajiv Gauba, Term Extended, Again, One Year, ராஜிவ் கவுபா, மத்திய அமைச்சரவை, பதவிக்காலம், நீட்டிப்பு

புதுடில்லி: மத்திய அமைச்சரவை செயலாளரான ராஜிவ் கவுபாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை செயலாளராக இருப்பவர் ராஜிவ் கவுபா. இவரது பதவிக்காலம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நீட்டிப்பு பதவிக்காலமும் முடிவடைய உள்ள நிலையில் தற்போது மேலும் ஓராண்டுக்கு பணியை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

1982ம் ஆண்டு ஜார்க்கண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜிவ் கவுபா, முன்னதாக மத்திய உள்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-202206:32:17 IST Report Abuse
Mani . V என்ன கொடுமை சரவணா? 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒருவர் கூட அந்த பதவிக்கு தகுதி இல்லாமல் போய் விட்டார்களே அதுனால ராஜிவ் கவுபாவின் பதவி காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டி வந்துவிட்டதே.
Rate this:
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
05-ஆக-202218:57:50 IST Report Abuse
sampath, k Exting govt. Services to the certain persons behind their age limit should not be considered since india have huge numbers of talented persons and not deping one or two persons. Don't encourage these types of attitudes
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X